மூன்றாம் உலகப் போருக்காக காத்திருக்கும் 10 அரக்க ஆயுதங்கள் - HybridAnalyzer Tamil

Hot

Monday 30 September 2019

மூன்றாம் உலகப் போருக்காக காத்திருக்கும் 10 அரக்க ஆயுதங்கள்


இந்த உலகில் பல நாடுகளும் பல விதங்களில் வளர்ச்சியடைந்துள்ளன. அதில் சில நாடுகள் தங்களின் பாதுகாப்பு கருதி பல பயங்கரமான ஆயுதங்களை உருவாக்கியுள்ளன.

அதில் இதுவரை உபயோகப்படுத்தாமல் இருக்கும் பத்து மோசமான அரக்க தன்மையுடைய ஆயுதங்களின் தொகுப்பை தான் தற்போது தொகுத்துள்ளோம்.

10. லிட்டில் டேவிட் மோர்ட்டர் (Little David Mortar)

இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த லிட்டில் டேவிட் மோர்ட்டர். இது ஜெர்மனி ராணுவம் உருவாக்கிய பாரிஸ் துப்பாக்கியை விட மிக பலம் வாய்ந்தது. அதற்கு காரணம் என்னவென்றால் பாரிஸ் துப்பாக்கியை இயக்குவதற்கு 250 நபர்களுக்கு மேல் தேவை. ஆனால் இந்த லிட்டில் டேவிட் மோர்ட்டாரை இயக்க 25 நபர்கள் மட்டுமே போதும். இதை மிக எளிமையாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். மேலும் இதை ஒருமுறை வெடிக்க வைக்க 12 மணிநேரங்கள் தான் தேவைப்படும். ஆனால் பாரிஸ் துப்பாக்கியை ஒருமுறை வெடிக்க வைப்பதற்கு முன்னதாக மூன்று நாட்களாக தயார் செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போர்க்காலத்தில் நேரடியாக தாக்காமல், எதிரி நாட்டின் மீது வான்வழியாக தாக்கி, தரைப்படையை கூட்டம் கூட்டமாக அழிக்கக்கூடியது. இதை இதுவரை உபயோகப்படுத்தாமல் இருப்பதற்கு காரணம் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இதை தயாரித்து முடித்த நிலையில் இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்துவிட்டது.

9. 2000 எம்1 அப்ராம்ஸ் டேங்க் (2000 M1 Abrams Tank)

இந்த டேங்க்கை உபயோகப்படுத்தாததற்கு காரணம் இதன் தரை மட்ட உயரம் தான். அதாவது, இதன் அடிப்பாகத்தின் உயரம் மிகக் குறைவாக இருந்ததால் பாலைவன நாடுகளில் மணல் பகுதியில் இதை நகர்த்துவது மிக கடினம். அதுமட்டுமில்லாமல் கண்ணிவெடியில் மிக எளிமையாக மாட்டிக் கொள்ளும் என்பதால் இதை இதுவரை உபயோகப்படுத்தவில்லை

ஆனால், இந்த டேங்க் மிக வலிமையானது. இதுவரை இதை பயன்படுத்தாமல் இருந்தாலும், அமெரிக்க இராணுவத் துறை இதை மாதிரியாக வைத்து தான், தனது அடுத்தடுத்த பதிப்புகளில் மிகவும் திறன் வாய்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8. ஜேப்பானிஷ் -400 விமானம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்(Japanese I-400 Aircraft Carrying Submarine)

இந்த நீர்மூழ்கி கப்பல் தான் முதன்முதலாக விமானத்தை ஏற்றிக்கொண்டு கடலுக்கு அடியில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஆகும். இது ஜப்பானியர்களால் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் எதிரிகளுக்கு தெரியாமல் போர் விமானங்களை வேறு இடங்களுக்கு நீருக்கடியில் எடுத்துக் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டது.

இந்த நீர்மூழ்கி கப்பல் மூலமாக ஒரே நேரத்தில் மூன்று போர் விமானங்களை நீருக்கு அடியில் எடுத்துச் செல்ல முடியும். அது மட்டும் இல்லாமல் கப்பல்களை நீருக்கு அடியில் இருந்தே தாக்கி அழிக்கக்கூடிய டார்பிடோ குண்டுகளும் இந்த நீர்மூழ்கி கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான் சரணடைந்து விட்டதால் இதை அவர்களால் பயன்படுத்த முடியவில்லை.

7. டேவி கிராக்கெட் எம்-28 அணுகுண்டு ரைப்பில் (Davy Crockett M28 Nuclear Rifle)

பார்ப்பதற்கு ஒரு சிறிய ஏவுகணை அமைப்பு போல காட்சியளிக்கும் இந்த ஆயுதம் அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் பனிப்போர் நிலவிய காலகட்டத்தில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது. இதன் தாக்குதல் தூரம் ஒரு மைல் தொலைவு தான் என்றாலும் இதனால் தாக்கப்படும் இடமானது சுமார் 400 மீட்டர் பரப்பளவிற்கு அணுஆயுத கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்படும்.

ஒருவேளை காற்று சாதகமாக இருந்தால் எட்டு கிலோமீட்டர் தூரம்வரை பாதிப்பு அதிகரிப்பதற்க்கும் வாய்ப்பு உள்ளது. ஏவப்படும் ஒரு மைல் தூரத்தில் இருந்து இந்த ஆயுதம் 8 கிலோ மீட்டர் வரை தாக்குவதற்கு சாத்தியம் இருப்பதால் ஏவியவர்களுக்ககே கூட வினையாக அமையலாம். இதுவே அந்த ஆயுதத்தை பயன்படுத்தாமல் இருக்க முக்கிய காரணமாக அமைந்து விட்டது.  மேலும், இது அணுகுண்டு என்பதால் நேட்டோ அமைப்பு இதை தடை செய்து விட்டது.

6. கார்டோன் ஹோ 229- வெளவ்வால் (Horten Ho 229 "Bat")

வெளவ்வால் போன்ற அமைப்புடைய இந்த ஜெட் விமானம் ஆனது ஒருமுறை எரிபொருளை நிரப்பி விட்டாலே 2000 கிலோ மீட்டருக்கும் மேல் ரேடாரில் மாட்டாமலேயே செல்லக் கூடிய வல்லமை பெற்றது. இந்த காலகட்டத்தில் என்னவோ 2000 கிலோ மீட்டர் ஒரே நேரத்தில் பயணிப்பது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், 1944-இல் அது மிக அசாதாரணம். மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு டன் எடையை கூட சுமந்து கொண்டு செல்லக்கூடிய திறன் வாய்ந்தது இந்த விமானம்

ஜெர்மனியின் கண்டுபிடிப்பான இது போரில் கலந்து கொள்ளும் நேரத்தில் அமெரிக்காவானது பேப்பர் கிளிப் என்ற மிஷன் மூலம் பல ஜெர்மனிய விஞ்ஞானிகள், இந்த விமானம் மற்றும் பல ஆயுதங்களை கடத்திச் சென்றுவிட்டது. அமெரிக்கா இந்த பேப்பர் கிளிப் என்ற மிஷனை நடத்தாமல் இருந்திருந்தால் இரண்டாம் உலகப்போரின் முடிவு வேறுவிதமாக கூட இருந்திருக்கலாம்.

5) எக்ஸ் பி-70 வல்கைரி (XB-70 Valkyrie)

இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயத்தில் அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் உள்ள தனிப்பட்ட பகை காரணமாக முன்னெச்சரிக்கையாக அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது தான் இந்த எக்ஸ் பி 70 வல்கைரி. இதனுடைய வேலை என்னவென்றால், மின்னல் வேகத்தில் எதிரிகளின் எல்லைக்குள் சென்று, வான்வெளியில் பயங்கரமான வெடிகுண்டுகளை ஏவிவிட்டு அதிவேகமாக திரும்பி வருவதே.

இதன் சராசரி வேகம் மணிக்கு மூன்றாயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் என கூறப்படுகிறது. இதன் முன்பகுதி வித்தியாசமாக உள்ளதால் எதிரி நாட்டு ரேடாரில் அவ்வளவு எளிதில் மாட்டாது. ஆனால், இது உருவாக்கப்பட்ட பின் மிகப்பெரிய போர் எதுவும் ஏற்படாததால் இதுவரை இதை பயன்படுத்தவே இல்லை.

4. எப்-22 ரேப்டர் (F-22 Raptor)

அமெரிக்க விமானப் படைக்காக உருவாக்கப்பட்ட இந்த ஜெட் ரக விமானத்தை தயாரிக்க சுமார் 950 கோடி டாலருக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. இது 1997 ஆம் ஆண்டு தன் முதல் சோதனையை வெற்றிகரமாக முடித்தது. மிக சக்திவாய்ந்த இந்த விமான வகையில் இதுவரை 195 விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன் பணி முழுமையாக 1997 ஆம் ஆண்டு முடிவடைந்தாலும், அதன் பின் இதை உபயோகிக்கும் வாய்ப்பு ஏற்படாததால் இந்த F-22 ரேப்டார் மூன்றாம் உலகப் போரை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

3. எஸ்.எல்..எம் (SLAM)

சூப்பர் சோனிக் லோ அல்டிடுயூடு மிஷைல் என்பதை தான் சுருக்கமாக எஸ் எல் எம் என குறிப்பிடுகிறார்கள். இந்த மிஷைல் மிக குறைந்த உயரத்தில் அதி வேகமாகச் சென்று எதிரியின் இடத்தில் வெடிபொருட்களை எறிவதற்காக உருவாக்கப்பட்டது. ஆள் இல்லாமல் செல்லும் இந்த வகை ஏவுகணை ஒரே நேரத்தில் சுமார் 16 இடங்களை தாக்கி அழிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது வெறும் ஏவுகணை மட்டுமல்ல, இதுவே ஒரு அணு ஆயுதம் தான். ஏனென்றால், இது பறப்பதற்கு இதில் அணு உலையால் இயங்கக்கூடிய என்ஜின்களை தான் பொருத்தி உள்ளார்கள். இந்த எஞ்சினில் இருந்து வெளிப்படும் புகையானது பறக்கும்போது காற்றிலும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே செல்லக்கூடியது. மேலும், இதன் வேலை முடிந்தவுடன் தரையிறக்கவும் முடியாது என்பதால் தன்னுடைய கடைசி இழக்கில் பெரிய அளவில் வெடித்து சிதறிவிடும்.

2. டீ சார் ஃபாம்பா ஹைட்ரஜன் குண்டு (Tsar Bomba Hydrogen Bomb)

உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட அணுகுண்டுகளில் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட இது தான் மிக சக்திவாய்ந்தது. இதன் சக்தியை பற்றி கூற வேண்டுமானால், இது ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டை விட மூன்று ஆயிரம் மடங்கு அதிக வீரியம் கொண்டது. ரஷ்யாவின் முதற்கட்ட சோதனையின்போது ரஷ்யாவில் இது வெடித்த இடத்திலிருந்து நார்வே வரை உள்ள இடங்களில் அதிர்வலைகள் பூமியை மூன்று முறை சுற்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த மோசமான சோதனையை நடத்துவதற்காக ரஷ்யா தனது நாட்டில் ஒரு தீவையே தனியாக ஒதுக்கியுள்ளது. 1965ஆம் ஆண்டு இந்த அணுகுண்டு உருவாக்கப்பட்டதால் இதனை சோதனை செய்ய முடிந்தது. இன்றய காலகட்டத்தில் அணுகுண்டு சோதனை செய்வது என்பது சாத்தியமில்லாத ஒரு காரியம். இப்படிப்பட்ட இந்த மோசமான அணுகுண்டு மூன்றாம் உலகப் போருக்காக காத்திருக்கிறது.

1.கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகள் (Inter continental Missiles)

இவ்வகை ஏவுகணைகள் மிக அதிக எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 5000 கிலோமீட்டர்களுக்கும் மேல் பயணிக்க கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் அதிக பலம் வாய்ந்த ஏவுகணைகளான எஸ்எஸ்-18 சேட்டான் மற்றும் ஒரே நேரத்தில் 16,000 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக்கூடிய அணுகுண்டுகள் போன்றவைகளை பொருத்திக்கொள்ள முடியும்.

கிட்டத்தட்ட 18 முதல் 25 டன் எடை கொண்ட அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு ஏவுகணையை உருவாக்கும் பணியில் இந்தியாவும் தீவிரமாக இறங்கியுள்ளது அதன் பெயர் கூட மிஷைல் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment