அவெஞ்சர்ஸ்-ன் மார்வல் நிறுவனம் வளர்ந்த சுவாரசியமான கதை - HybridAnalyzer Tamil

Hot

Tuesday 1 October 2019

அவெஞ்சர்ஸ்-ன் மார்வல் நிறுவனம் வளர்ந்த சுவாரசியமான கதை


மார்வெல் நிறுவனத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு காமிக்ஸ் எனப்படும் புத்தகங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் மார்வெல் நிறுவனம் உருவானதே அங்கிருந்துதான். காமிக் என்பதன் துவக்கம் கற்கால மனிதர்களிடம் இருந்தே ஆரம்பித்து விட்டது. அதற்கான சான்றுகள் தான் குகை ஓவியங்கள். இது பின்னாளில் இதிகாசங்கள், புராணங்கள், சுவர் ஓவியங்கள் என மாறிக்கொண்டே வந்தது. கடைசியாக 1900-களின் துவக்கத்தில் புத்தகங்களாக நகைச்சுவை, சூப்பர் ஹீரோ என குழந்தைகளுக்கான கதைகளோடு காமிக்காக வெளிவர ஆரம்பித்தன.

மார்ட்டீன் குட்மேன் என்பவர் 1933 முதல் சிறுகதைகளை எழுதி வெளியிட்டு வந்துள்ளார். இந்த சமயங்களில் தான் காமிக் என்ற ஒன்று பிரபலமாகத் தொடங்கியது. சரியாக ஆறு வருடங்களுக்கு பிறகு 1939-ல் மார்வெல் காமிக்-1 என்ற பெயரில் இந்த நிறுவனத்தின் முதல் புத்தகம் வெளியானது. அப்போது இந்த நிறுவனத்தின் பெயர் டைம்லி காமிக்ஸ்.
இதில் ஹியுமென் டார்ச் என்ற சூப்பர் ஹீரோ மற்றும் நமோர் என்ற வில்லன் இவர்களுக்கு இடையே நடக்கும் சண்டை போன்றவைகளை பட கதையாக வரைந்து வெளியிட்டார்கள்.

அதற்கு அடுத்ததாக 1941-ல் கேப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி அதனைப் பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். இது மாபெரும் வெற்றியடைந்து சுமார் 10 லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. அது இரண்டாம் உலகப்போர் சமயம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் வெளியான எந்த புத்தகமும் எதிர்பார்த்த அளவிற்கு பிரபலம் அடையவில்லை. மேலும், மக்களிடம் எதிர்ப்பார்ப்பும் அதிகமாகிவிட்டது. இப்படியே சுமாராக பயணித்துக்கொண்டிருந்த டைம்லி காமிக்ஸ் நிறுவனத்திற்கு 1950-க்கு மேல் டிசி காமிக்ஸ் நிறுவனம் பெரும் போட்டியாக அமைந்தது.

அதனால் காலத்திற்கு ஏற்றார் போல மாற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, டிசி காமிக்ஸ்-இல் வரும் கதாபாத்திரங்களை போலவே இவர்களும் தொழில்நுட்பம் சார்ந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களைக் கொண்டு வர ஆரம்பித்தார்கள். அதன் பிறகுதான் சிலந்திமனிதன், அவெஞ்சர்ஸ் போன்ற கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தினார்கள். இதில் மார்வெல்-ன் மிகப்பெரிய வெற்றி பெற்ற காமிக் புத்தகம் ஸ்பைடர் மேன் தான். 1961-ல் தான் டைம்லி காமிக்ஸ் என்ற பெயர் மார்வெல் காமிக்ஸ்  என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1970-களில் போட்டியை சமாளிக்க முடியாமல் மார்ட்டீன் குட்மென் நிறுவனத்தை விற்று விட்டார். இதனால் எடிட்டர் ஆக வேலை செய்த ஸ்டேன்ட்லீ நிர்வாகி ஆகிவிட்டார்.

இவர் நிர்வாகி ஆன பிறகு, புது புது யுக்திகள் மற்றும் பல நாடுகளில் புத்தகத்தை வெளியிடும் அனுமதி போன்றவைகளை பெற்று நிறுவனத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவந்தார். மார்வெல் நிறுவனம் உருவாகி 25 வருடங்களை கொண்டாடும் விதமாக பல குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிட்டுள்ளார். மீண்டும் டீசி காமிக்ஸ்-ன் ஆதிக்கம் தொடங்கியதால், 1986 முதல் 1991 இரண்டு முறை நிறுவனம் கை மாறி விட்டது. இதனிடையே 1944 முதல் பல திரைப்பட நிறுவனங்கள் மார்வெல் கதாபாத்திரங்களை தழுவி படங்களை வெளியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால் மார்வெல் நிறுவனம் காமிக்-ஐ தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை.

கடைசியாக 1993-ல் மார்வெல் ஸ்டுடியோ உருவாக்கப்பட்டு ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன் போன்ற கதாபாத்திரங்கள் படமாக்கப்பட்டன. ஆனால், 2009-ம் ஆண்டு டிஸ்னி நிறுவனம் சுமார் 400 கோடி டாலருக்கு மார்வெல் நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதனுடைய மொத்த நிறுவனங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள்  கொண்டு வந்தது. 2009-க்கு பிறகு டிஸ்னியிற்க்கு கீழ் அயன் மேன் 1 முதல் அவெஞ்சர்ஸ் என்ட் கேம் என பல பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவைகள் அனைத்தும் சுமார் 1600 கோடி டாலர்க்கும் மேல் வசூல் செய்துள்ளன. 

அவெஞ்சர்ஸ் என்ட் கேம் திரைப்படத்தை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் ஆனால், இதற்கு முன்பு வெளிவந்த 20 திரைப்படங்களையும் பார்த்திருக்க வேண்டும்இதற்கிடையில் டீசி மற்றும் மார்வெல் இரண்டிலும் சில பொதுவான கதாபாத்திரங்கள் கூட உள்ளன. இது தான் மார்வெல் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை அதன் பின்னணியில் உள்ள வரலாறு.

No comments:

Post a Comment