எவ்வளவுதான் பாதுகாப்பு
வசதிகளும், பாதுகாப்பும்
பலமாக இருந்தாலும்
கொள்ளை சம்பவங்கள்
நடந்து கொண்டுதான்
உள்ளன.
இதில்
சில கொள்ளையர்கள்
மாட்டிக்கொண்டு இருந்தாலும்,
பலர் தப்பி
விடுகிறார்கள். அப்படி
இதுவரை வங்கிகளில்
நடந்த மிகப்பெரிய
வங்கிக் கொள்ளைகளை
இங்கு பார்ப்போம்.
5. லூமீஸ் ஃபார்கோ கொள்ளை (Loomis fargo Robbery)
Loonis
fargo என்ற நிறுவனம்
1997-ல் புளோரிடாவில்
நிறுவப்பட்டது. அதே வங்கியில் பாதுகாப்பு
பெட்டகத்தில் பொறுப்பாளராக
இருந்த டேவிட்
ஸ்காட் என்பவரால்
தான் இந்த
கொள்ளை சம்பவம்
அரங்கேறியுள்ளது. வங்கியைப் பற்றி
முழுமையாக தெரிந்து வைத்திருந்த
இவர் தனது
மனைவி மற்றும்
சில நண்பர்களுடன்
சேர்ந்து இரவு
நேரத்தில் சுமார்
120 கோடி ரூபாய்
மதிப்பிலான பணக்கட்டுகளை
அதே வங்கியின்
வாகனத்தில் வைத்து
கடத்திச் சென்றுள்ளார்.
அடுத்த நாள் நிறுவனத்தின் வேலையாட்கள் வங்கியை
திறக்கப்படும்போது திறக்க
முடியாததால் காவல்துறைக்கு
தகவல் கொடுத்துள்ளார்கள். நடந்த
சம்பவம் பெரியது
என்பதால் காவல்
துறையினர் சிறப்பு
அதிரடிப்படையான எப்.பி.ஐ இடம் விசாரணையை மேற்கொள்ளும் பொருப்பை ஒப்படைத்து
விட்டனர்.
சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு
ஸ்காட், மெக்சிகோவிற்க்கு தப்பிச் செல்லும் எண்ணத்தில்
இருந்துள்ளார். ஆனால், ஸ்காட்டின் நண்பரான
சேம்பர் என்பவர்
யாரைப் பற்றியும்
கவலைப்படாமல் பெரிய
வீடு,கார் மற்றும் தனது
மனைவியின் வங்கி
கணக்கில் அதிக
தொகை என
ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். மேலும்
ஸ்காட் ஐ
ஏமாற்றி மொத்த
பணத்தையும் தானே
எடுத்துக் கொள்ளும்
எண்ணத்திலும் இருந்துள்ளார்.
வங்கி ஊழியர்களிடம் விசாரித்ததில் ஸ்காட் தான் கொள்ளையடித்து உள்ளார் என்பதை உறுதி செய்த போலீசார், அவரது நண்பர்களையும் கண்காணித்துக் கொண்டிருந்தது பற்றி தெரியாத சேம்பர் போலீசாரின் வலையில் சிக்கிக் கொண்டார். இறுதியில் கொள்ளையடித்ததில் 88 சதவீத பணத்தை மீட்டுள்ளார். இது இந்த வங்கியின் இரண்டாவது பெரிய கொள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி ஊழியர்களிடம் விசாரித்ததில் ஸ்காட் தான் கொள்ளையடித்து உள்ளார் என்பதை உறுதி செய்த போலீசார், அவரது நண்பர்களையும் கண்காணித்துக் கொண்டிருந்தது பற்றி தெரியாத சேம்பர் போலீசாரின் வலையில் சிக்கிக் கொண்டார். இறுதியில் கொள்ளையடித்ததில் 88 சதவீத பணத்தை மீட்டுள்ளார். இது இந்த வங்கியின் இரண்டாவது பெரிய கொள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
4. சென்ட்ரல்
வங்கி,பிரேசில் (central
bank of brazil)
கொள்ளையர்கள் இந்த கொள்ளை
சம்பவத்தை
நடத்துவதற்க்கு
பல மாதங்களாக
திட்டமிட்டு, முதலில் வங்கியின் கீழ்
78 மீட்டர் நீளத்திற்க்கு சுரங்கம்
தோண்டி உள்ளார்கள்.
அவ்வளவு நீளம்
வரை சுரங்கம்
தோண்டுவதற்காக வங்கியின்
பின் பகுதியில்
உள்ள ஒரு நிலத்தை
விலைக்கு வாங்கி
அதில் நாங்கள்
ஆழமான குழியை
தோண்டும் நிறுவனத்தை அமைத்திருக்கிறோம். மேலும்
செடி,புல் போன்றவற்றையும் விற்பனை
செய்கிறோம் என
ஒரு விளம்பர
பலகையும் அமைத்துள்ளார்கள். இதனால், அங்குள்ளவர்களுக்கு இவர்கள் சுரங்கம் தோண்டுவது தெரியவில்லை. சுரங்கம் முழுமையாக தோண்டப்பட்ட
பிறகு, ஒரு சனிக்கிழமை இரவு
நேரத்தில் தங்கள்
கைவரிசையை அவர்கள்
காட்டியுள்ளார்கள்.
இதில் சுமார் 300 கோடி ரூபாயை திருடி
உள்ளார்கள் என
கணக்கிடப்பட்டுள்ளது. அது சனிக்கிழமை இரவு
என்பதால் அடுத்த
நாள் ஞாயிறு,
விடுமுறை நாள்.
அதனால் கொள்ளையடிக்கப்பட்டது
யாருக்கும் உடனடியாக
தெரியவில்லை.
அதற்க்குள் கொள்ளையர்கள் மிக
எளிமையாக தலைமறைவாகிவிட்டார்கள். இந்த கொள்ளை சம்பவம்
பற்றி போலீசார்
கூறியது என்னவென்றால்,
திருடியவர்கள் மிக
அதிநவீன தொழில்
நுட்பத்தை உபயோகித்திருப்பதால்
சிறந்த எஞ்சினியர்கள்
ஆகவும் கணித
மேதையாகவும் இருந்திருக்கக்கூடும்
கூடும். மேலும் அந்த
சுரங்கம் இடையில் இடிந்து விடாமல் இருக்க சீலிங் கூட
அமைத்துள்ளார்கள். திருடிய பின் கைரேகை சிக்கக் கூடாது என
கால்சியம் ஆக்சைடு
தூவி விட்டுச்
சென்றுள்ளார்கள். மிகவும் நேர்த்தியாக 2005-ம் ஆண்டு நடந்த
இந்த சம்பவத்தில்,
ஈடுபட்டவர்கள் இதுவரை
பிடிபடவில்லை.
3. செக்கியுரிட்டாஸ்
டெபாட் கொள்ளை (Securitas
depot robbery)
இது பிரிட்டிஷ்
வரலாற்றின் மிகப்பெரிய
கொள்ளை சம்பவம்.
இந்த சம்பவத்தில்
வங்கி மேலாளரின்
குடும்பம் கடத்தப்பட்டு
அவர்களை பணயக்
கைதியாக வைத்து
மிரட்டி வங்கி
மேலாளரின் உதவியுடன்
கொள்ளை அடித்துள்ளார்கள். கிட்டத்தட்ட
500 கோடி ரூபாய்
மதிப்பிலான பணத்தை
திருடிவிட்டு அதே
அறையில் வங்கியில்
இருந்தவர்களை அடைத்து
விட்டு தப்பியுள்ளார்கள். பின்பு
போலீசார் விசாரணையில்
பலர் சந்தேகிக்கப்பட்டு
பின்பு லி
முரே என்பவர் தான் இந்த
கொள்ளை சம்பவத்திற்க்கு காரணம் என கண்டுபிடித்தார்கள்.
ஆனால், அதற்க்குள் அவர் மொராக்கோ என்ற
நாட்டிற்கு தப்பி
விட்டார். பின்பு பிரிட்டிஷ் போலீசார்
மொரக்கா நாட்டுடன் இணைந்து
லீ முரே-வை
பிடித்துள்ளார்கள். ஆனால், தகுந்த ஆதாரம் இல்லாததால்
கொள்ளையடித்த பணத்தை
மீட்க முடியவில்லை.
மேலும், மொராக்கோ அரசாங்கம் லீ-வை லண்டன்
அழைத்து செல்வதற்கு
லண்டன் சிறையில்
இருந்த mohamad karbouzi என்ற தீவிரவாதியை கேட்டுள்ளது.
இதில் இங்கிலாந்து
அரசுக்கு சுமார்
55 கோடி வரை
செலவு ஏற்பட்டு
உள்ளது. ஆனால், 2006-ல் கொள்ளையடிக்கப்பட்ட பணம்
இன்றளவும் மீட்கப்படவில்லை.
2. ஃநைட்ஸ் பிரிட்ஸ்
செக்குரிட்டி டெப்பாசிட் கொள்ளை(knightsbridge
security deposit robbery)
1987-ல் இங்கிலாந்தில் நடந்த
மற்றொரு வங்கிக்
கொள்ளை சம்பவம் தான் இது.
இதற்கு தலைமை
தாங்கியது valerio viceei, இவர் இத்தாலியைச் சேர்ந்த
ஒரு பிரபல
வழக்கறிஞரின் மகன்.
இந்த வங்கிக்
கொள்ளை க்கு
முன்பே அவர்
இத்தாலியில் 50-க்கும் மேற்பட்ட சர்ச்சைக்குரிய
சம்பவங்களில் ஈடுபட்டு
உள்ளார். அதனால் அங்கிருந்து தப்பிய
இவர் இங்கிலாந்திலும்
தனது கூட்டாளிகளுடன்
சேர்ந்து வங்கியின்
லாக்கர் வேண்டும்
என மேலாளரை
அணுகி லாக்கர்
இருக்கும் அறையை
அடைந்ததும் ஊழியர்களை
கட்டிவைத்துவிட்டு கொள்ளையடித்து
விட்டு அமெரிக்காவிற்கு
தப்பிவிட்டார். 1987-ல் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின்
இன்றைய மதிப்பு
சுமார் 900 கோடியை தாண்டும்.
பின்பு
விசாரணையில் கைரேகை
மூலம் வெளிரியோ தான் கொள்ளையடித்தது என்பதை
உறுதி செய்த
போலீசார் தீவிர
சோதனையில் சில
கூட்டாளிகளை பிடித்துள்ளார்கள். சரியாக
ஐந்து மாதங்களுக்குப்
பிறகு வெளிரியோ தனக்கு பிடித்த
ferrari testarussa காரை மீட்க
இங்கிலாந்து வந்துள்ளார்.
இதை அறிந்த
காவல்துறையினர் சினிமாவில் வருவது
போல துரத்திப் பிடித்து
உள்ளார்கள்.
பிறகு 22 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று முதல் 5 வருடம் லண்டனிலும் மற்ற காலங்களை இத்தாலி சிறையில் கழித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு விடுதலை பெற்றபோது தனது கூட்டாளிகளுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட சண்டையில் இறந்து விட்டார். இவரது வாழ்க்கை பயணத்தை too fast to live மற்றும் lie by the gun, die by the gun என இரண்டு புத்தகங்களாக வெளியிட்டு உள்ளார்கள்.
பிறகு 22 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று முதல் 5 வருடம் லண்டனிலும் மற்ற காலங்களை இத்தாலி சிறையில் கழித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு விடுதலை பெற்றபோது தனது கூட்டாளிகளுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட சண்டையில் இறந்து விட்டார். இவரது வாழ்க்கை பயணத்தை too fast to live மற்றும் lie by the gun, die by the gun என இரண்டு புத்தகங்களாக வெளியிட்டு உள்ளார்கள்.
1. ஈராக் மத்திய
வங்கி (Central bank
of Iraq)
2003-ம் ஆண்டு அமெரிக்காவுக்கும்
ஈராக்கிற்கும் போர்
நடந்துகொண்டிருந்தபோது சரியாக
போர் தீவிரம்
அடையும் நிலையில்
கொள்ளையர்கள் இதுதான்
நமக்கான சரியான
நேரம் என
கருதி வங்கியில்
உள்ள மொத்த
பணத்தையும் அரசாங்க
முத்திரையைக் காட்டி
எடுத்துச் சென்றுவிட்டார்கள். வங்கி
ஊழியர்களும் போர்
சமயம் என்பதால்
அந்த கடிதத்தை
ஆராயாமல் பணத்தை
கொடுத்து விட்டார்கள்.
இது ஒரு
குளறுபடியான திருட்டு
என்றே கூறலாம்,
ஏனென்றால் அவ்வாறு
அரசின் முத்திரை இட்ட கடிதத்தைக்
காட்டி திருடியது
சதாம் உசேனின்
மகன் என்றும்.
இதையடுத்து அமெரிக்க ராணுவம்
மீட்டது நாட்டுடைமையாக்கி
கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு ஒன்பது ஆயிரம் கோடியைத் தாண்டும். மேலும், இந்த கொள்ளை சம்பவத்திற்கு கின்னஸ் உலக சாதனை நிறுவனம் உலகின் மிகப்பெரிய திருட்டு என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.
இந்த கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு ஒன்பது ஆயிரம் கோடியைத் தாண்டும். மேலும், இந்த கொள்ளை சம்பவத்திற்கு கின்னஸ் உலக சாதனை நிறுவனம் உலகின் மிகப்பெரிய திருட்டு என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.