எதிர்கால
தொழில் நுட்பமானது தற்போது உள்ள தொழில் நுட்பத்தை விட மிகவும் அதிக திறன் வாய்ந்ததாகவும் மனிதர்களின் வேலைகளை மிக எளிமையாக்கும் வகையிலும் இருக்கும்.
அதே நேரத்தில் சில எதிர் விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம். எது எப்படி இருந்தாலும் தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலையை எளிமையாகவும் அவர்களுடைய வாழ்வை மேம்படுத்தவும் தான் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் எதிர்காலத்தில் வரவிருக்கும் சில தொழில் நுட்பங்களைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.
5.
செயற்க்கை நுன்னறிவு (Artificial
Intelligence)
இதனை
மெஷின் இன்டலிஜென்ஸ் எனவும் அழைப்பார்கள். சாதாரண மனிதர்களுக்கு இருக்கக் கூடிய இயற்கையான அறிவுத் திறன் போலவே செயற்கையாக இயந்திரங்களுக்கு அறிவுத்திறன் வழங்குவதே இந்த தொழில்நுட்பம். இதன் மூலம் இடத்திற்கு தகுந்தார் போல செயல்படக்கூடிய வகையில் பல நவீன கருவிகளை உருவாக்க முடியும். உதாரணமாக ஒரு கணினியில் ஆயிரக்கணக்கான மருத்துவ குறிப்புகளை சேமித்து வைக்கலாம். நாம் கேட்கும் போது அந்த தகவலையும் கணினியால் கொடுக்க முடியும்.
ஆனால் எதற்காக கேட்கிறார்கள் என்பது சாதாரண கணினிக்கு தெரியாது. செயற்க்கை
நுன்னறிவு திறன் கொண்ட கணினியை அணுகும் போது அதற்கான விடையும் கிடைக்கும். இதன் மூலம் மனிதர்களுக்கு ஆபத்தான வேலைகளான ராணுவம்,விண்வெளி ஆராய்ச்சி போன்ற பலவற்றை கருவிகள் மூலம் மனிதர்கள் போலவே சிறப்பாக செய்ய முடியும். இதன் முதற்கட்டமாக அமெரிக்காவில் மனிதன் போல பகுத்தறிவுடன் உருவாக்கப்பட்ட ஷோபியா என்ற ரோபோட் ஆனது 2015-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் குடியுரிமை வாங்கியுள்ளது. இதனிடம் பத்திரிகையாளர்களில் ஒருவர் நீ மனித இனத்தை அழித்து விடுவாயா என கேட்டபோது அதுவும் சிரித்துக்கொண்டே அழித்து விடுவேன் எனக் கூறியுள்ளது.
இப்போது கூட அமேசான் அலெக்சா
கூகுள் ஹோம் போன்ற சில செயற்க்கை
நுன்னறிவு திறன் கொண்ட சாதனங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இதனால் எதிர்காலத்தில் பல செயற்க்கை
நுன்னறிவு ரோபோக்கள் மற்றும் கருவிகள் உருவாக்கப்படலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
4. தானியங்கி
வாகனங்கள் (Automatic
Vehicles)
ஓட்டுனரின்
உதவி இன்றி தானாகவே இயங்கும் தானியங்கி வாகனங்களை உருவாக்குவதில் தற்போது பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் அனைத்து நிறுவனங்களுமே ஆரம்ப நிலையில்தான் உள்ளனர். கார் நிறுவனங்கள் மட்டுமின்றி இணைய ஜாம்பவானான கூகுள்-ம் இந்த களத்தில் இறங்கி உள்ளது. மற்ற அனைத்து நிறுவனங்களையும் விட ஜெனரல் மோட்டார்ஸ் என்ற நிறுவனமே இந்த துறையில் முன்னிலை வகித்து வருகிறது. இவர்களது கார்களில் ரேடார், ஜிபிஎஸ், கம்ப்யூட்டர் விஷன் மற்றும் பல நவீன சென்சார்களை பொருத்தியுள்ளார்கள்.
இந்த சென்சார்கள் காரின் முன், பின், இடது, வலது என அனைத்து பக்கங்களிலும் ஏதேனும் தடுப்புகள் உள்ளனவா என்பதை ஒவ்வொரு மைக்ரோ வினாடியும்
கண்கானித்து, அந்த தகவல்களை கணினிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். ஜிபிஎஸ் உதவி மூலம் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை சரியாக அறிந்து இதனால் தானாகவே செல்ல முடியும். மேலும் இந்த தொழில்நுட்பத்தில் கூகுள் அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறது.
3. நவீன
வீடு (Smart home)
இந்த
தொழில்நுட்பம்
மூலம் நம் வீட்டிலிருக்கும் எந்த ஒரு வீட்டு உபயோக பொருட்களையும் ஒரே இடத்தில் இருந்தபடி இயக்க முடியும். தற்போது இது தொடக்க நிலையில் உள்ளது என்பதால் அமேசன் அலெக்சா, கூகுள் ஸ்மார்ட் ஹோம் போன்ற கருவிகளை பயன்படுத்தி ஸ்மார்ட் டிவி மின் விளக்கு போன்ற சில கருவிகளை மட்டும் இயக்க முடிகிறது.
ஆனால் இனிவரும் காலத்தில் வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் என வீட்டில் உள்ள ஒவ்வொரு சாதனத்தையும் மற்ற கருவிகளையும் சுலபமாக இயக்கும்படி செய்வதற்கான கருவிகள் தயாரிக்கப்படும்.
2. கம்பியில்லா
மின்சாரம் (Wireless
electricity)
ஒருகாலத்தில்
மின்சாதன பொருட்களை இயக்க பெரிய பெரிய வயர்கள் பயன்பாட்டில் இருந்தன. அதன் பிறகு அதுவே சிறிய அளவிலும் பின்பு ரேடியோ வேவ்ஸ், இன்பிராரெட், ஃப்ளூடூத், வைஃபை என வயர் இல்லாமல் தகவல்களை மட்டும் அனுப்பி கொள்ளும்படியாக தொழில்நுட்பம் வளர்ந்து இப்போது மிகச் சிறிய இடைவெளியில் எந்தவித இணைப்பும் இன்றி மின்சக்தியை அனுப்ப முடிகிறது. இது எப்படி செயல்படுகிறது என்றால் மின்சாரமானது முதலில் மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு அனுப்பப்படுகிறது.
பிறகு அதற்க்கான கருவி மூலம் மின்காந்த அலைகள் மீண்டும் மின்சாரமாக மாற்றப்படுகிறது. தற்போது உள்ள வசதிகளின் மூலம் மிகக் குறைந்த இடைவெளியில் மிகக் குறைந்த அளவு மின்சக்தியை மட்டுமே இப்படி அனுப்ப முடிகிறது. மேலும் இந்த முறையில் மின் இழப்பு இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் இந்த குறைகள் சரிசெய்யப்பட்டு சிறப்பான ஒரு கம்பியில்லா
மின்சாரம் சார்ந்த
தொழில்நுட்பம்
பயன்பாட்டுக்கு
வரும்.
1. பொருட்களின்
இணையம் (IOT)
ஒரு
காலத்தில் கணினியில் மட்டும் பயன்படுத்த முடிந்த இணைய வசதியை கடந்த சில ஆண்டுகளாக கைப்பேசியில் பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது இணையதளத்தை
கண்கானிப்பு கேமரா, நவீன கால
டீவி, கார் என பல கருவிகளிலும் பல வகைகளில் பல வசதிகளுக்காக பயன்படுத்துகிறோம். அதுபோல அனைத்து மின்னணு பொருட்களையும் இணையத்தோடு இணைப்பதன் வாயிலாக உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சுலபமாக அவற்றை இயக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பம் தான் ஐஓடீ.
அதாவது இண்டர்நெட் ஆஃப்
திங்க்ஸ். ஐஓடீ முறையைப் பயன்படுத்தி ஸ்மார்ட் ஹோம், உற்பத்தித்துறை, விவசாயத் துறை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, கட்டுமான துறை என அனைத்துத் துறைகளுக்குமான கருவிகளை தயாரிக்கும் ஆராய்ச்சிகள் உலகின் பல இடங்களில் தற்போது நடந்து வருகின்றன. எனவே கூடிய விரைவில் இது பயன்பாட்டுக்கு வரலாம்.