கார் என்றாலே அனைவருக்கும் அலாதியான பிரியம் தான். கார்கள் சாதாரண வகையில் தொடங்கி சொகுசு கார் வரை பயணம் செய்யவும், ஓட்டவும் குழந்தைகள் முதல் பொரியர்கள் வரை ஆசைப்படுவார்கள். இன்றைய காலத்திற்கு ஏற்ப பல்வேறு நவீன வசதிகளுடன் கார்கள் புராட்சியிலும் ஈடுபடுகின்றன.
கார்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தான் பயணம் செய்ய பயன்படுகிறது. இருந்தாலும், நவீன காலத்திற்கு ஏற்ப சூற்று சூழலை கருத்தில் கொண்டு பன்னாடுகளை சோர்ந்த நிறுவனங்கள் கார்கள் தயாரிப்பில் அக்கரை காட்டுகின்றன. அதில் சோலார்கள் கார்கள், தண்ணீரில் ஓடும் கார்கள், கேஸ்களில் இயங்கும் என கார்கள் தயாரிக்கப்படுகின்றன. வளர்ந்து வளரும் மக்கள் தொகையும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் கார்கள் உலகளவில் விற்பனையாகிறது. அதிலும் இன்றைய சூப்பர் ஹைவே எனப்படும் அதிவேக காலத்தில் மக்கள் இருப்பதால், கார்களில் பயணம் செய்யும் போது பாதுகாப்பாகவும் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இதனால் கார்களில் ஜிபிஎஸ், ஏர்பேக், ஆட்டோமெடிக் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு நவீன மற்றும் பாதுகாப்பு வசதிகள் அடங்கியுள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பறக்கும் கார்களை தயாரிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் உலக அளவில் நவீன மற்றும் சொகுசு கார்களை தயாரித்து வருகிறது. ரோல்ஸ்-ராய்ஸ் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் உலக கார் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
வரும் 2020ம் ஆண்டுக்குள் பறக்கும் காரை ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த காரில் ஹெலிகாப்டரை போல் செங்குத்தாக பறக்கவும், (EVTOL) தரையிறக்கவும் வசதியுடன் தயாராகிறது. இதனால் சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தப்பிக்கவும் விரைவாகவும் செல்ல முடியும்.
ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பறக்கும் கார்களில் 800 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம். இந்த கார்கள் மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் போன்ற விலை ஏற்றம் இறக்கம் கண்டு பயப்பட தேவையில்லை.
இந்த கார்கள் வரும் 2 ஆண்டுகளுக்கு தயாரிப்பை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரதிட்டமிட்டுள்ளதாக ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பு பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பறக்கும் கார்களில் 800 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம். இந்த கார்கள் மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் போன்ற விலை ஏற்றம் இறக்கம் கண்டு பயப்பட தேவையில்லை. இந்த நிறுவனத்தின் அறிவிப்பு பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Details of Future Flying cars in tamil
No comments:
Post a Comment