தோல்வியில் முடிவடைந்த எரிபொருள் சார்ந்த 5 அறிய கண்டுபிடிப்புகள் | Failed Inventions in Tamil - HybridAnalyzer Tamil

Hot

Thursday, 19 July 2018

தோல்வியில் முடிவடைந்த எரிபொருள் சார்ந்த 5 அறிய கண்டுபிடிப்புகள் | Failed Inventions in Tamil

1.நிலக்கரி வாகனம்
1800-களில் பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களை அதிக அளவில் இரானுவ உபயோத்திற்காக பயன்படுத்தியதால் எரிபொருள் பற்றாகுறை ஏற்ப்பட்டது. அந்த சமயங்களில் நிலக்கரி மூலம் இயங்கும் படியான இரயில் போலவே கார்களுக்காக எஞ்சிங்களை உருவாக்கினார்கள். ஆனால் இதை இயக்குவதற்க்கு பெரிய இடம் தேவை பட்டது. மேலும் அது சாத்தியம் என்று வைத்து கொண்டாலும் காரிலுள் செல்பவர்கள் ஒரு எரியும் அடுப்பினுல் அமர்ந்திருக்கும் உணர்வே ஏற்ப்படும் இந்த காரணங்கலால் இந்த கண்டுபிடிப்பு அகல பாதாலத்தில் விழுந்தது.

2.டெஸ்லா டவர்
1901-ம் ஆண்டு நிக்கோலா டெஸ்லா 56மீட்டர் உயரமுள்ள ஒரு டவரை கட்டினார். இதன் மூலம் மின்சாரத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு எந்த வித இனைப்பும் இல்லாமல் பரிமாரிகொள்ள இயலும் எனவும் கருதினார். ஆனால் பின்னாலில் மார்க்கோனி வயரில்லா தொலைதொடர்பு முறையான டெலகிராம் என்பதை கண்டு பிடித்ததால், டெஸ்லா-விற்க்கு கொடுக்கப்பட்ட பண உதவிகள் மறுக்கப்பட்டன இதனால் மேற்க்கொண்டு ஆராய்ட்சியை தொடர முடியவில்லை.

ஆனால் இலுமினாட்டி எனப்படும் இரகசிய அமைப்பு பற்றி பேசுபவர்கள் என்ன கூறுகிரார்கள் என்றால், டெஸ்லாவின் கண்டுபிடிப்பு வெற்றியடைந்தால் எண்ணை வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படும். அதனால் தான் திட்டமிட்டு டெஸ்லாவை சாதிக்க விடாமல் செய்துள்ளனர் என கூறுகின்றனர்.
3.சக்கரை எரிபொருள்
அமெரிக்காவில் ஒருகாலத்தில் பெட்ரோல் தட்டுபாடு ஏற்பட்டபோது அங்குள்ள விவசாயிகள் எரிபொருளிற்க்காக ஒரு முறையை கையாண்டார்கள். அது என்னவென்றால், மக்கா சோளத்திலிருந்து ஒருவித சக்கரையை தனியாக பிரித்தெடுத்து, அதை நொதிக்க செய்து எத்தனாலாக மாற்றி எரிபொருளாக பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் இன்று எத்தனால் மூலம் இயங்கும் வண்டிகளை ஓட்டுவது சட்டபடி குற்றமாம்.(பயோ எரிபொருள வரவே விட மட்டாங்க போல.

4.சூராவளி
1970-ல் லூயிஸ் மிக்காஃடு என்பவர் செயர்க்கையாக சூராவளி காற்றை உருவாக்கி அதன்மூலம் மிசாரம் எடுக்க திட்டமிட்டார் இதற்க்கான சில அமைப்புகளையும் கூட உருவாக்கி விட்டார். ஆனால், தெர்மோடைடமிக்ஸ்-ன் முதல் விதி படி ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மட்டுமே மாற்ற முடியுமே தவிர அதை உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. இந்த சில அறிவியல் பூர்வமான காரணங்களால் இது தோல்வியை தழுவியது.

5.ஏர்(காற்று)
2000-ஆம் ஆண்டு சமயங்களில் பிரான்ஸ் நிருவணமும் இந்தியாவின் டாட்டா நிருவணமும் சேர்ந்து ஒரு காரை வடிவமைத்தார்கள். அதில் எரிபொருளாக அழுத்தப்பட்ட காற்றை பயன்படுத்தினார்கள் அதாவது வண்டி டயர்களுக்கு காற்று அடிப்பார்கள் அல்லவா அந்த முறையை பயன்படுத்தினார்கள். ஆனால் இதில் பயன்படுத்தபடும் காற்றை உருவாக்க பெட்ரோலை விட அதிக மின்சார செலவு ஆனதால் இந்த முயற்ச்சியை அமைதியாக நிருத்தி வைத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment