மழை நீர்ன் நன்மை | Good Uses and Minerals of Rain water in Tamil - HybridAnalyzer Tamil

Hot

Thursday, 6 September 2018

மழை நீர்ன் நன்மை | Good Uses and Minerals of Rain water in Tamil

மழைநீர் நன்மை:


மழை நீரில் குளிக்கும் ஒருவருக்கு ஒருவேளை சளிப் பிடித்து, காய்ச்சல் வந்தால், அவர் நலமாக (ஆரோக்கியமாக) இல்லை, எனவே அவை உடலுக்கு நலத்தை ஏற்படுத்துகின்றன என்று பொருள். தூய்மையான மழைத் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக உயிர்த் தன்மை (பிராணன்) இருக்கிறது.  மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளிப் பிடிக்கிறது, தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது.
இது ஏன் வருகிறது...?


அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான உயிர்த் தன்மை (பிராணன்) இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்தப் பிராணனை உறியத் தொடங்குகிறது. உடலில் பல நாட்களாக, பல ஆண்டுகளாகத் தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும்,
 மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் உடல்நலமாக  (ஆரோக்கியமாக) வாழ்கிறானா, இல்லையா
 என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சளிப் பிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால்
அவன் நலமாக இருக்கிறான் என்று பொருள். எனவே, மழையில் நனைந்து
 காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து அச்சப்படவேண்டிய தேவை இல்லை. மகிழவாக இருங்கள். நமது உடல் நன்மை செய்கிறது.
 அது ஒரு மருத்துவம்.  எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலைக் குணப்படுத்த முடியும்.

மழைநீரைக் குடிப்பதன் மூலமாகவும் நமது உடலில் உயிராற்றலை (பிராண சக்தியை) அதிகப்படுத்த முடியும். மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரைக் குடிக்கக்கூடாது.  ஏனென்றால் காற்றில் தூசுகளும்
 குப்பைகளும் ஊர்திகளிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும்
வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்தத் தூசுகள், குப்பைகளை எடுத்துக்கொண்டு நிலத்தை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்குப் பின் வரும் மழைநீரை நேரடியாக ஏனத்தின் மூலமாகவோ, ஒரு கலனைப் பயன்படுத்தியோ அந்த நீரைப் பிடிக்கவேண்டும்.

 ஒருவேளை நமது வீட்டின் கூரை தூய்மையாக இருந்தால்  கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் தூய்மையான நீர் இதில் (உயிர்த் தன்மை) பிராணன் அதிகமாக இருக்கும்.  இந்தத் தண்ணீரை ஓர் ஏனத்திலோ, ஒரு புட்டியிலோ காற்றுப் புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு ஆண்டுகளுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்.  ஆனால் அந்தத் தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும்.

 எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது நமது உடலுக்குத் தேவையான அனைத்து
உயிர்த் தன்மையும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி,  நமது உடல் நலம் அடைகிறது. எனவே, மழைநீரின் உயிர்த் தன்மையை நாம் பயன்படுத்துவோம்.

குழந்தைகள் மழையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம் மழையில் நனைவது மிகவும் அருமையான, மகிழ்வான மனத்திற்குப் பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் நலமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது  அதில்  நனையலாம் நல்லது. மழைநீரைக் குடிக்கலாம் நல்லது. மழைநீர் ஓர் அருமையான மருந்து.

எனவே இனி நம் வாழ்வில் மழைநீரைச்  சேர்த்துக் கொள்வோம்.

Tag: goodness and health of rain water, is it good or bad wetting in rain

No comments:

Post a Comment