HybridAnalyzer Tamil: Health Tips

Hot

Showing posts with label Health Tips. Show all posts
Showing posts with label Health Tips. Show all posts

Wednesday, 26 September 2018

செயல் இலந்த கிட்னியை எப்படி நாட்டு மருத்துவத்தின் மூலம் சரி செய்வது | How to Resolve kidney failure using natural remedy's in Tamil

September 26, 2018 0
தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும், அப்படி இந்த level இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும் இதை சரி செய்ய எளிய வழி உண்டு.

நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும், ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய் இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள், 15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில் உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,
அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.

இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஒரு வயது குழந்தை முதல் முதியவர்
வரை சாப்பிடலாம்.

இந்து உப்பு என்றால் என்ன ?

இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.
இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?

  • Thyroid பிரச்சனைக்கு கேட்கும்.
  • வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை வாய் புண் ஆகியவை கேட்கும்.
  • அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை தவிர்த்து இந்து உப்பு சேருங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.

Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள் சந்தேக படமா சாப்பிடுங்க ,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்,

மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.

2 ஆண்மையை வளர்ப்பது.

3 . மனதிற்கு நல்லது..

4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.

5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.

6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.

ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.
இது கதையல்ல நான் நேரில் கண்ட உண்மை எனது உறவினர் ஒருவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து போனது நாங்கள் எவ்வளவோ செலவு செய்தும் அவர்களின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருந்தது பிறகு நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பெயரில் இந்து உப்பை வாங்கி கொடுத்தோம் இப்போது நல்ல நிலையில் ஆரோக்கியமாக உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

நல்ல பதிவுகளை பகிர்வோம் யாரோ ஒருவர் உங்களால் பயன் பெறட்டும்,உடல் நலம் பெறட்டும்.

Tag:  How to Resolve kidney failure using natural remedy's in Tamil, Best Home Remedy for kidney problem,
Read More

Thursday, 6 September 2018

முக்கியமான சில மருத்துவ குறிப்புகள் | Best Daily Health Tips and Home Remedy's in Tamil

September 06, 2018 0
1. How Stop Fungus Forming in Tamil

வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர சொறி சிரங்கு போன்றவை குணமாகும் மேலும் தோல் பளபளப்புடன் சுருக்கம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.(Cucumber Health Tips in Tamil)

2. How Stop lice and Dandruff using Home remedy's in Tamil

சீத்தாப்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வர பேன் மற்றும் பொடுகு தொல்லை உட்பட தலையில் ஏற்படும் பல பிரச்சனைகள் குணமாகும்.

3. How to Stop Bleeding Gum Teeth in Tamil

பற்களின் ஈறுகளில் வரும் இரத்தக்கசிவு தடுக்க கல்உப்பு கடுக்காய் சீரகம் ஆகிய மூன்றையும் பொடி செய்து பல் துலக்கினால் ரத்த கசிவு நின்றுவிடும்.

4.How to Stop Hysteria,debility,hysterics,jitters using onion in tamil

சிறிய வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி விரைவில் குணமாகும்.

5.How to reduce weight and fat to get Fit Body in Tamil

புடலங்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளதால் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை கட்டுக்குள் வரும் புடலை கொடியின் இலையை சாறு எடுத்து இரண்டு ஸ்பூன் வெறும் வயிற்றில் குடித்து வர இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.

Read More

மழை நீர்ன் நன்மை | Good Uses and Minerals of Rain water in Tamil

September 06, 2018 0

மழைநீர் நன்மை:


மழை நீரில் குளிக்கும் ஒருவருக்கு ஒருவேளை சளிப் பிடித்து, காய்ச்சல் வந்தால், அவர் நலமாக (ஆரோக்கியமாக) இல்லை, எனவே அவை உடலுக்கு நலத்தை ஏற்படுத்துகின்றன என்று பொருள். தூய்மையான மழைத் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக உயிர்த் தன்மை (பிராணன்) இருக்கிறது.  மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளிப் பிடிக்கிறது, தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது.
இது ஏன் வருகிறது...?


அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான உயிர்த் தன்மை (பிராணன்) இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்தப் பிராணனை உறியத் தொடங்குகிறது. உடலில் பல நாட்களாக, பல ஆண்டுகளாகத் தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும்,
 மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் உடல்நலமாக  (ஆரோக்கியமாக) வாழ்கிறானா, இல்லையா
 என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சளிப் பிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால்
அவன் நலமாக இருக்கிறான் என்று பொருள். எனவே, மழையில் நனைந்து
 காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து அச்சப்படவேண்டிய தேவை இல்லை. மகிழவாக இருங்கள். நமது உடல் நன்மை செய்கிறது.
 அது ஒரு மருத்துவம்.  எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலைக் குணப்படுத்த முடியும்.

மழைநீரைக் குடிப்பதன் மூலமாகவும் நமது உடலில் உயிராற்றலை (பிராண சக்தியை) அதிகப்படுத்த முடியும். மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரைக் குடிக்கக்கூடாது.  ஏனென்றால் காற்றில் தூசுகளும்
 குப்பைகளும் ஊர்திகளிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும்
வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்தத் தூசுகள், குப்பைகளை எடுத்துக்கொண்டு நிலத்தை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்குப் பின் வரும் மழைநீரை நேரடியாக ஏனத்தின் மூலமாகவோ, ஒரு கலனைப் பயன்படுத்தியோ அந்த நீரைப் பிடிக்கவேண்டும்.

 ஒருவேளை நமது வீட்டின் கூரை தூய்மையாக இருந்தால்  கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் தூய்மையான நீர் இதில் (உயிர்த் தன்மை) பிராணன் அதிகமாக இருக்கும்.  இந்தத் தண்ணீரை ஓர் ஏனத்திலோ, ஒரு புட்டியிலோ காற்றுப் புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு ஆண்டுகளுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்.  ஆனால் அந்தத் தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும்.

 எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது நமது உடலுக்குத் தேவையான அனைத்து
உயிர்த் தன்மையும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி,  நமது உடல் நலம் அடைகிறது. எனவே, மழைநீரின் உயிர்த் தன்மையை நாம் பயன்படுத்துவோம்.

குழந்தைகள் மழையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம் மழையில் நனைவது மிகவும் அருமையான, மகிழ்வான மனத்திற்குப் பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் நலமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது  அதில்  நனையலாம் நல்லது. மழைநீரைக் குடிக்கலாம் நல்லது. மழைநீர் ஓர் அருமையான மருந்து.

எனவே இனி நம் வாழ்வில் மழைநீரைச்  சேர்த்துக் கொள்வோம்.

Tag: goodness and health of rain water, is it good or bad wetting in rain
Read More

Natural Home Remedys For Cold, Cough in Tamil | மாத்திரையின்றி ஜலதோஷம்,சளி போன்றவற்றை எப்படி குணப்படுத்தலாம்

September 06, 2018 0
மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..?

குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.

குறிப்பு 1

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

குறிப்பு 2

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு 3

ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

குறிப்பு 4

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

குறிப்பு 5

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு 6

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

குறிப்பு 7

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Tag: natural home remedy's in tamil, home remedys for sali,cough,cold,fever in tamil 
Read More

Friday, 9 March 2018

Kolluvin Maruthuva Gunangal

March 09, 2018 0
மருத்துவ குணம் நிறைந்த கொள்ளு எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா?
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர். குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள். அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.
சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ரசம் வைக்கும் போது சிறிது பயன்படுத்தலாம். சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.
கொள்ளு ரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.
‘இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொள்ளுவில் உள்ளது. இதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை ரசமாக வைத்து உண்பது மிகுந்த நன்மை என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.
Read More

Saturday, 17 February 2018

பிரண்டை துவையல் செய்வது எப்படி - How to prepair pirandai thuvayal

February 17, 2018 0

எழும்பை வழு படுத்தும் பிரண்டை துவையல் செய்வது எப்படி - How to make pirandai thuvayal


பிரண்டை - ஒரு பிடி


வெங்காயம் - பாதி

காய்ந்த மிளகாய் - 2
அ 3

தனியா - 1/2 தேக்கரண்டி



பூண்டு - 3 அ 4 பல்

புளி - நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - வதக்க

கடுகு - 1/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தாளிக்க

* பிரண்டையை கழுவி,சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம்,பூண்டு,காய்ந்த மிளகாய்,தனியா,பிரண்டை துண்டுகள்,புளி

சேர்த்து நன்கு வதக்கவும்.

* பிரண்டை நன்கு வதங்க வேண்டும்.இல்லையெனில்,சாப்பிடும் போது நாக்கு அரிக்கும்.

* வதங்கியதும்,ஆற வைத்து,சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில்,கடுகு,
உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும்.

* பிரண்டை துவையல் தயார்.இந்த துவையல் வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.
* சாம்பார் சாதம்,ரசம் சாதம்,தயிர் சாதத்துடன் தொட்டும் சாப்பிடலாம்.
சுவையாக இருக்கும்.
Read More

Thursday, 15 February 2018

Medical Usages of our natural all neem Plants in tamil - Home Remidy

February 15, 2018 0

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்!

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். வேம்பு வகைகளில் ஒன்றான ‘நிலவேம்பு’ குறித்துக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் பிற வகைகள் குறித்து இங்கு பார்ப்போம்.

சிவனார் வேம்பு

இதை, ‘அன்னெரிஞ்சான் பூண்டு’ என்று கிராமங்களில் சொல்கிறார்கள். சிவப்பு நிறத் தண்டில், கருஞ்சிவப்பு நிற மலர்களையும் புல் போன்ற சிறிய இலைகளையும் கொண்டிருக்கும். நல்ல மழைவளம் இருந்தால் 6 அடி உயரம் வரை வளரும். மணற்பாங்கான இடங்களில் பெருமளவு வளர்ந்திருக்கும். குறிப்பாக, பனை மரங்கள் உள்ள இடத்தில் இச்செடியும் இருக்கும். தவிர, இது பனைத்தொழிலோடும் சம்பந்தப்பட்ட செடியாகும். பனையில் இருந்து கிடைக்கும் பதநீரைக் காய்ச்சுவதற்கு இச்செடியை எரிபொருளாகப் பயன்படுத்துவார்கள். இதைப் பறித்த அன்றே கட்டாகக் கட்டி எரிக்க முடியும். அதனால், இதை ‘அன்று எரிந்தான் பூண்டு’ என்று அழைத்துள்ளனர். அது மருவி ‘அன்னெரிஞ்சான் பூண்டு’ ஆகிவிட்டது.

தமிழகத்தின் வறட்சி நிலங்களில் பனை-உடை-ஆடு என்னும் உயிர்ச்சூழல் நிலவியது. உயர்ந்த பனைமரம், அதற்குக் கீழ் குடை பரப்பி நின்ற உடைமரங்கள், அதன் கீழ் ஆடுவளர்ப்பு என இந்த உயிர்ச்சூழல் நிலவிய காலங்களில் ஆண்டின் 12 மாதங்களும் மக்களுக்கு பொருளாதாரப் பலன் கிடைத்தது. இந்தப் பனை, உடை, ஆடு எனும் அற்புதமான உயிர்ச்சூழல், வேலிக்கருவை மரங்களாலும் ரசாயன விவசாய முறையாலும் கெடுக்கப்பட்டது. இதனால், மண்ணின் வளம் குன்றி அரிய வகை சிவனார் வேம்பு உள்ளிட்ட மூலிகைகள் அருகி வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
சிவனார் வேம்பின் வேர்தான் மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுகிறது. இது ‘ஒரு பருவத் தாவரம்’ என்பதால் வேரைச் சேகரிப்பதால் சூழல் பாதிப்புக் கிடையாது. இந்த வேரை சிறுதுண்டுகளாக நறுக்கி நிழலில் காய வைத்து, ஒன்றிரண்டாகப் பொடி செய்து... நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி சொறி, சிரங்குகளின் மேல் பூசினால் சிறப்பான பலன் கிடைக்கும்.
சித்த மருத்துவ மருந்துக் கடைகளில், ‘சிவனார் வேம்புக் குழித் தைலம்’ மற்றும் ‘சிவனார் வேம்பு சூரணம்’ என்ற மருந்துகள் கிடைக்கும். இவற்றை உள் மருந்தாக எடுத்துக்கொண்டால், நாள்பட்ட முற்றிய தோல் நோய்கள்கூட குணமாகும். இம்மருந்துகளால் வெண்புள்ளி, குஷ்ட நோய் தேமல்கள் ஆகியவை குணமானதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால், இம்மருந்துகளைச் சித்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கறிவேம்பு

இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புத மூலிகை. நாம் நறுமணத்துக்காக மட்டும் பயன்படுத்தி், பிறகு தூக்கி எறியும் கறிவேப்பிலைதான் இது. இதில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இதைத் தாளிக்க மட்டுமே பயன்படுத்தினால் முழுப்பயன் கிடைக்காது. அதனால், உணவுத்தட்டில் இருந்து இதைத் தூக்கி எறியாமல் கண்டிப்பாக உண்ண வேண்டும். அப்போதுதான் முழுப்பலன் கிடைக்கும்.
முன்பு குழந்தைகளைக் குளிப்பாட்டிய உடன் ‘உரப்பு மருந்து’ எனும் மருந்தை குழந்தைகளின் நாக்கில் தடவி விடுவார்கள். சிறிது கறிவேப்பிலை, 2 மிளகு ஆகியவற்றை நெய்யில் வறுத்து, வெந்நீர் விட்டு அரைப்பதுதான் உரப்பு மருந்து. தினமும் இதை குழந்தைகளின் நாக்கில் தடவிவந்தால், செரிமான சக்தி அதிகரிப்பதுடன், வயிறு சம்பந்தமான பிணிகள் வராமல் தடுக்கப்படும். சோகை நோயும் தடுக்கப்படுவதோடு, கண்பார்வை வளமாகும். தோல் பளபளப்பாகும். இப்பழக்கத்தை விட்டுவிட்டு... ‘கிரைப் வாட்டர்’ என்ற பெயரில் கண்டதையும் கொடுத்து வருவது காலக் கொடுமை.

சித்த மருத்துவத்தின்படி, செரிமானக் கோளாறால் வயிற்றில் ஏற்படும் வாயுதான் அனைத்து நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது. ‘வாயு முத்தினால் வாதம்’ என்று கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. கறிவேப்பிலையில் தயாரிக்கப்படும் அன்னப்பொடிக்கு வாயுப் பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தி உண்டு. கறிவேப்பிலைத்தூள் 70 கிராம், சுக்கு, மிளகு, ஓமம், காயப்பொடி, சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் வகைக்கு 10 கிராம், இந்துப்பு 5 கிராம் ஆகியவற்றை நன்கு அரைத்தால் அன்னப்பொடி தயார். இதைக் காற்றுப்புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு நாளும் மதிய உணவு சாப்பிடும்போதும், சுடு சோற்றில் ஒரு தேக்கரண்டி அன்னப்பொடி போட்டு சிறிது பசுநெய்விட்டுப் பிசைந்து மூன்று கவளம் சாப்பிட்டு வந்தால் வாய்வு, ஏப்பம், வயிற்றிரைச்சல், வயிற்றுப்புண் பிரச்னைகள் வரவே வராது. ஆண்டுக்கணக்கில் வயிற்றுப்புண்ணுக்காக மாத்திரைகள் சாப்பிட்டு வருபவர்கள்கூட அன்னப்பொடி மூலம் விரைவில் குணமடைய முடியும். கறிவேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு, வேப்பிலை ஈர்க்கு ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக நறுக்கி இடித்துத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி பச்சிளம் குழந்தைகளுக்குப் புகட்டினால், பால் வாந்தி நிற்கும்.

மலைவேம்பு

மலைக்காடுகள், ஓடைக்கரைகளில் தன்னிச்சையாக உயரமாக வளரக்கூடிய மரமிது. சாதாரண வேப்பிலையில் காணக்கூடிய அறுவாய் தோற்றம், இம்மரத்து இலைகளில் இருக்காது. பூக்கள் கொத்து கொத்தாகவும் வெண்மை நிறத்துடனும் இருக்கும். காய் உருண்டையாகவும் கெட்டியாகவும் இருக்கும். தோற்றத்தில் இதை ஒத்திருக்கும் துளுக்க வேம்பை, மலைவேம்பு எனக் கருதுவதுண்டு. ஆனால், துளுக்க வேம்பில் நீல நிறப் பூக்கள் பூப்பதை வைத்து எளிதாக இனம் காணலாம். இது இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்தமையால், துளுக்க வேம்பு என அழைக்கப்படுகிறது. மலைவேம்பு வணிக ரீதியாகப் பலன் கொடுப்பதால் பல பண்ணைகளில் அதிகளவு வளர்க்கப்பட்டு வருகிறது.

கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கும் அருமருந்து மலைவேம்பு. மலைவேம்பின் இலைகளை நன்கு அரைத்து, துவையல் பதத்தில் ஒரு நெல்லிக்காயளவு (3 கிராம்) மாதவிலக்கு ஆன 2, 3, 4-ம் நாட்களில் காலையில் மட்டும் சாப்பிட வேண்டும். இம்மருந்து சாப்பிடும் நாட்களில் உப்பைத் தவிர்க்க வேண்டும். 3 மாதங்கள் இதைக் கடைப்பிடித்தால் கருத்தரிப்புப் பிரச்னைகள், கருப்பைக் கட்டிகள், வலியுடன் கூடிய மாதவிலக்கு ஆகியவை குணமாகும்.
‘தேரையர் தைல வர்க்கச்சுருக்கம்’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கலிங்காகித் தைலம்’ தயாரிப்பில் மலைவேம்புச் சாறு பயன்படுத்தப்படுகிறது. இத்தைலம், மாதவிடாய் மற்றும் கருப்பை நோய்களைக் குணமாக்கும். இத்தைலத்தைச் சித்த மருத்துவரின் பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மலைவேம்பு இலைகளை அப்படியே அரைத்து, தலையில் பற்று போட்டு அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் பேன், பொடுகு போன்றவை ஒழியும். ஒரு வாரம் தொடர்ந்து பற்றுப் போட்டு குளிக்க வேண்டும்.

வேம்பு

வேம்பின் பயன்கள் அனைவரும் அறிந்ததுதான் என்றாலும், சில விஷயங்களை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். வேம்பு என்றாலே அது பூவைக் குறிப்பதுதான். மாசி, பங்குனி மாதங்களில் வேப்பமரத்தைச் சுற்றிலும் நிறைய வேப்பம்பூ விழுந்து கிடக்கும். மரத்தைச் சுற்றி சுத்தமான வெள்ளைத்துணியை விரித்து அதில் பூவைச் சேகரித்து நிழலில் காய வைத்துக்கொள்ள வேண்டும். உணவுக்கு ரசம் சமைக்கும்போது அதில் வேப்பம்பூப் பொடியையும் சேர்த்து சமைத்து உண்டு வந்தால்... சுவையின்மை, வாந்தி, ஏப்பம் முதலியன குணமாகும். இந்த ரசத்தைச் சாதத்துடனோ அல்லது தனியாகவோ உண்ணலாம்.
அம்மைநோய்க் கொப்புளங்களின் மீது வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை அரைத்துப் போட்டால் குணமாகும். அம்மை நோயின் வெம்மை, உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் கண் ஆகியவற்றைப் பாதிக்காமல் இருக்க... வேப்பங்கொழுந்துடன் அதிமதுரப் பொடி சேர்த்து அரைத்துச் சுண்டைக்காயளவு உருட்டி மூன்று வேளை உணவுக்குப் பிறகும் உண்டு வர வேண்டும். இப்படி 7 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

வேப்பிலையைத் துளிர்களோடு சேர்த்துப் பறித்து நிழலில் காயவைத்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும். பொடியின் அளவில் பாதி அளவில் ஓமம், சிறிது உப்பு ஆகியவற்றைச் சேர்த்து இடித்துச் சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் பெயர் வேம்பு கற்பம். இப்பொடியை காலை, மாலை உணவுக்குப் பிறகு 3 கிராம் அளவு எடுத்து உண்டு வந்தால்... கண்ணில் இருக்கும் படல மறைப்பு, புழுவெட்டு ஆகியவை குணமாகும். மஞ்சள் காமாலை நோயில் இருந்து மீண்டவர்கள் இதை மூன்று மாதங்கள் உண்டு வர... களைப்பு, சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
வேப்பிலை, ஈர்க்கு, கொழுந்து, பூ, காய், காயின் பால், பழம், விதை, வித்தெண்ணெய், பிண்ணாக்கு, பட்டை, வேர், வேர்ப்பட்டை அனைத்துமே சிறந்த மருத்துவக் குணம் வாய்ந்தவை.
இழந்த மரங்கள் எண்ணற்றவை!
வேம்பில்... கருவேம்பு, சந்தனவேம்பு, சுந்தரவேம்பு, நாய்வேம்பு, வெடிவேம்பு, மதகரிவேம்பு, சர்க்கரை வேம்பு எனப் பல ரகங்கள் உள்ளன.
இவற்றில் சர்க்கரை வேம்பு குறித்துக் ‘குணபாடம் மூலிகை’ எனும் நூலில் க.ச.முருகேச முதலியார், “1886-87-ம் ஆண்டில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வெளிப்புறம் மன்றோ சிலைக்கு மேற்புறச்சாலையில் ஒரு மரம் இருந்தது. இம்மரத்தின் இலை இனிப்பாயிருந்ததைக் காண, வெகுசனங்கள் அங்குத் தினந்தோறும் கூடுவதைக் கண்ட அதிகாரிகள் அம்மரத்தை வெட்டிவிட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி நாம் இழந்த மரங்கள் எண்ணிக்கையில் அடங்காது.
சித்தர்களால் அருளப்பட்ட மூல நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூலிகைகள் குறித்த கருத்துகள் மற்றும் மக்கள் வழக்கத்தில் இருந்த மூலிகை மருந்து செய்முறைகள் ஆகியவற்றைத் தொகுத்து... 1936-ம் ஆண்டு ‘குணபாடம் மூலிகை’ எனும் பெயரில் வெளியிட்டுள்ளார், க.ச.முருகேச முதலியார். இந்த நூல் இன்றளவும் சித்த மருத்துவக் கல்லூரிகளில் மூலிகைக்கான பாடநூலாக விளங்குகிறது.

சர்க்கரை வேம்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்குச் செழிய நல்லூரில் உள்ள காளியம்மன் கோவிலிலும், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குள்ளும் உள்ள ஒரு வகை வேப்ப மரத்தை, சர்க்கரை வேம்பு என்கிறார்கள். ஆனால், அம்மரத்தின் இலைகள் இனிக்கவில்லை. ஆனால், கசப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. தவிர, கொத்தமல்லிப் பூப்போலப் பூக்கிற ஒரு சிறு செடியையும் சர்க்கரை வேம்பு என்கிறார்கள்.
இதன் இலைகள் இனிக்கும். ஆனால், இதுவும் சர்க்கரை வேம்பு அல்ல. இச்செடியை கேரள மக்கள் ‘கல்லுருக்கி’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். அதை, சிறுநீரகக் கற்களைக் கரைக்கப் பயன்படுத்தி வருகிறார்கள்.






all type of neem tree details and health remidys in tamil
Read More

Wednesday, 14 February 2018

Best Natural Mineral water purifier in tamil

February 14, 2018 0

தேற்றான் கொட்டை



இதுதான் தேற்றான் கொட்டை (thettran kottai) நீரில் உள்ள நோய் கிருமிகளைக் கொன்று நீரை தெளிய வைக்கும் ஆற்றல் கொண்டது.... மண் பானையில் 2 கொட்டை மட்டும் போட்டு சாதாரண குழாய் நீரை ஊற்றி குடிநீராக பயன்படுத்தலாம்.....பெருமைக்காக எவ்வளவு பணம் கொடுத்து மினரல் வாட்டர் வாங்கினாலும்... இந்த மண்பானை குடிநீரில் தான் உடல் ஆரோக்கியம் உள்ளது...... பயன்படுத்துங்கள்....நலமோடு வாழுங்கள்.....
Read More