நண்பர்கள் முன் நீங்கள் எப்போதும் அறிவாளியாக தெரிய வேண்டுமானால் கீழே உள்ள உண்மைகள் உங்களுக்கு தெரிந்தாலே போதும்.
20. உலகின் முதுகெலும்பு
உள்ள உயிரினங்களில் மிக சிறிய உயிரினம் நியூ
கினியாவில் உள்ள ஒரு தவளை இனம் ஆகும். இது வெறும் 7 மில்லி மீட்டர்
நீளமே உடையது. இது 2009 ஆம் ஆண்டு லூசியானா ஸ்டேட் யுனிவர்சிட்டி
ப்ரொஃபஸர் ஆன கிரிஸ் ஆஸ்டின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
19. டிஜிட்டல் கரன்சி
எனப்படும் மின் பணப்பரிவர்த்தனையில் இன்று அதிக மதிப்பு உடைய பிட்காயின் தனது
முதல் ட்ரான்சாக்சனின் போது ஒரு பீட்சா ஆர்டர் செய்ய சுமார் பத்தாயிரம் பிட்காயின்கள்
தேவைப்பட்டது. ஆனால், இன்று அந்த 10000 பிட்காயின்களின் மதிப்பு நமது இந்திய ரூபாயில்
சுமார் 1000கோடியிர்க்கும் மேல்.
18. உலகின்
மிகச்சிறிய சிலந்தி வெறும் 0.4 மில்லி மீட்டர்
மட்டுமே நீளமுடையது. இந்த அளவு ஒரு சிறிய
குண்டூசி-ன் தலைப்பகுதி போன்று தான் இருக்கும்.
17. உலகின் மிகப்
பழமையான உடை எகிப்தில் உள்ள கல்லறையில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது. இது சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள்
கணக்கிட்டுள்ளனர்.
16. துபாயில் உள்ள
பால்ம் ஐலேண்ட் முழுக்க முழுக்க செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு ஆகும். மூன்று
வெவ்வேறு தீவுகளாக கட்டப்பட்ட இந்தச் செயற்கைத் தீவுகள் 2001- ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து பால் ஜமீலா என்ற ஒரு தீவின் பணி 2011 - ஆம் ஆண்டு முழுமையாக முடிவடைந்து சுற்றுலா
பயணிகளுக்காக திறக்கப்பட்டு உள்ளது.
15. உலகின் விலை
அதிகமான வளர்ப்பு மீனின் பெயர் பிளாட்டினம் அரோவாணா. இதன் தற்போதைய அதிகப்படியான
மதிப்பு சுமார் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள்.
14. எவரெஸ்ட்
சிகரத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக உயரமான மலை காட்வின் ஆஸ்டின் அல்லது
ச்சகோரி ஆகும் இது கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 8611 மீட்டர் உயரத்துடன் இரண்டாவது பெரிய மலையாக உள்ளது.
13. ஆசியாவில் உள்ள
மிகப் பெரிய பாலைவனம் கோபி வாலைவனம் தான். இது 5 லட்சம் சதுர
மைல் பரப்பளவுடன் வட சீனாவில் இருந்து மங்கோலியா வரை பரந்து விரிந்துள்ளது. வருடத்திற்கு
வெறும் ஏழு இன்ச் மழை அளவு மட்டுமே இங்கு பதிவாகிறது. இந்த இடத்தில் இப்படி
குறைவான மழை பொழிவதற்கு காரணம் மழை பொழிய கூடிய மேகக் கூட்டங்களை இமயமலை தடுத்து
விடுகிறது. இந்த பாலைவனம் ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம் மட்டும் அல்லாமல் உலகின்
இரண்டாவது பெரிய பாலைவனமாகவும் உள்ளது.
12. கண் தெரியாதவர்களுக்கும்
கனவு காணுவார்கள்.இதில் பிறவியிலேயே கண் தெரியாதவர்கள் காட்சிகள்
சம்பந்தமாக, இல்லாமல் ஒளி, உணர்வு, சுவாசம் போன்றவற்றை கனவில் காண்பவர்கள். விபத்தில் பார்வை இழந்தவர்கள்
சாதாரணமானவர்கள் போலவே கனவு காண்பார்கள்.
11. உலகின் மிகப்
பழமையான உயிரினமாக கருதப்படும் சயநோ பாக்டீரியா என்ற கடல் பாசி சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகவும், பூமியின் முதல் உயிரினமாகவும் கருதப்படுகிறது.
10. உலகின் மிகப்
பெரிய மலைத் தொடர் ஆண்டிஸ் மலைத்தொடர் தான். சுமார் 7000 கிலோ மீட்டர் தொடர்ச்சியான நீளம் கொண்ட இந்த மலை ஏழு நாடுகளில் பரந்து
விரிந்து காணப்படுகிறது. இந்த மலையில் உள்ள மச்சுபிச்சு என்ற இடத்தில்தான்
எந்திரன் திரைப்படத்தில் வந்த
கிளிமஞ்சாரோ பாடல் கூட படம் பிடிக்கப்பட்டது.
9. பூனைகளால் தன்
எஜமானரின் முகத்தையும் குரலையும்
அறிந்து கொண்டு, அவர்கள் தன்னை அழைக்கிறார்கள் என அறிந்து கொள்ள முடியும். ஆனால்
அவைகள் நாம் அழைப்பதை
கண்டுகொள்ளாமல் அலட்சியமாக
விட்டுவிடும். அதற்கு
தேவைப்படும் போது மட்டுமே நம்மை அழைக்கும்.
8. உலகிலுள்ள
தரைவாழ் வேட்டை விலங்குகளில் மிகப் பெரிய விலங்கு துருவக் கரடிகள் இவற்றின் எடை 900 கிலோவும் நீளம் சுமார் 11 அடியும் இருக்கும்.
7. மனிதனின் தொடை எலும்பானது நம் உடலின் மிக பலம் வாய்ந்த பகுதியாகும். இது உடைய
சுமார் ஒரு டன் அழுத்தத்திற்கு மேல் எடை தேவைப்படும்.
6. ஒட்டக சிவிங்கிகளின் கழுத்து மிக நீளமாக இருப்பதால் இதன் இரத்த ஓட்டத்தின் வேகம் மிக அதிகமாக இருக்கும்.
எனவே இதுவே மற்ற
உயிரினங்களை விட அதிக ரத்த அழுத்தம் கொண்ட உயிரினம் ஆகும்.
5. எல்லா
உயிரினங்களிலும் பெண் மட்டுமே பிரசவிக்கும் தன்மை கொண்டது. ஆனால் கடல்வாழ்
உயிரினமான கடல் குதிரை இனத்தில் மட்டும் ஆண் கரு முட்டையை பெண்ணிடம் இருந்து வாங்கி, அதை பிரசவிக்கும் தன்மையை கொண்டுள்ளது.
4. ஒரு முழுமையாக
வளர்ந்த கங்காரு சுமார் 200 சென்டி மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. ஆனால்
இது பிறக்கும் போது வெறும் இரண்டரை சென்டி மீட்டர்
மட்டுமே நீளம் கொண்டதாக இருக்கும் என்பது மிகவும் ஆச்சரியமான உண்மை.
3. கொக்கோ டீ மர்
என்னும் மரத்தின் விதை தான் உலகின் மிகப்பெரிய விதையாகும். இந்த மரம் பனைமரத்தின் இனத்தைச் சார்ந்தது. இந்த விதை 30 சென்டி மீட்டர் நீளமும் சுமார் 18 கிலோ எடை வரையிலும் இருக்கும். மிகப்பழமையான இந்த இனம் கிழக்கு ஆப்பிரிக்க
நாடான Seychelles என்ற நாட்டில் தான் அதிகமாக உள்ளது.
2. நாம் எல்லோரும் டூத் பேஸ்ட் ட்யூப் இன் கீழ்
பகுதியில் உள்ள வண்ணம் கிரீன் என்றால் நேச்சுரல் மற்றும் ரெட் என்றால் கெமிக்கல்
என நினைத்திருப்போம். ஆனால், இவை ஆட்டோமேடிக் பேக்கிங் மெஷின்களில் பேக்கிங்
Identification-ற்க்காக பயன்படுத்தப்படுகின்றன என்பது தான்
உண்மை.
1. கடலில் உள்ள மிக
ஆழமான பகுதி மரியானா டிரெஞ்ச் இதன் ஆழம் கிட்டத்தட்ட 11 கிலோ மீட்டர்கள். இது எவரெஸ்ட் சிகரத்தையே மூழ்க வைக்கும் அளவிற்கு ஆழமானது.
No comments:
Post a Comment