இலங்கை இந்தியா-விற்க்கு மிக அருகாமையில் இருக்கும் ஒரு தீவு நாடு, இதை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை பற்றி தான் இதில் தொகுத்துள்ளோம்.
1. உலகின் எட்டாவது
அதிசயமாக இலங்கை-யின் சீகிரியா
யுனெஸ்கோவால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2. இலங்கையிலேயே
உலகின் முதல் யானை அனாதை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. (பின்னவெலயில் உள்ளது).
3. இலங்கை அதன்
வடிவத்தால் 'இந்து சமுத்திரத்தின் முத்து' என்றும் 'இந்தியாவின் கண்ணீர் துளி' என்றும் அழைக்கப்படுகிறது.
4. இலங்கையில்
அதிகளவில் கருவாடு உற்பத்தி செய்யப்படுகிறது.
5. இலங்கையில் உள்ள
நுவரெலியா பிரதேசம் 'சிறிய இங்கிலாந்து' (Little England) என்று அழைக்கப்படுகிறது.
6. உலகில் முதன்
முதலில் பெண் பிரதமரைக் கொண்ட நாடு இலங்கையாகும்.
7. சிங்கக் கொடி
என்றும் அறியப்படும் இலங்கையின் தேசியக் கொடியில் பல்வேறு கருத்துக்கள்
உள்ளடக்கப்பட்டுள்ளன.
8. இலங்கை
தெற்காசியாவில் இரண்டாவது உயர்ந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டிருக்கிறது.
(மாலைத்தீவிற்கு அடுத்ததாக).
9. இங்கு ஹோட்டல் எனக்குறிப்பிடப்பட்ட அனைத்திலும் இரவில் தங்குவதற்கான வசதி
காணப்படாது.
10. உலகின் பழமையான, மனிதனால் நடப்பட்ட மரத்தின் தாயகம் இலங்கையாகும். (ஸ்ரீ
மகா போதி)
11. உலகின் நான்காவது பெரிய தேயிலை உற்பத்தியாளரும், (சீனா, இந்தியா மற்றும் கென்யாவுக்குப் பிறகு)
மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளரும் இலங்கையே ஆகும்.
12. உலகின் மிகப்பெரிய நிலப் பாலூட்டியான யானையையும், மிகப்பெரிய கடல் பாலூட்டியான நீல திமிங்கலத்தை ஒரே நாளில் காணக்கூடிய ஒரே நாடு
இலங்கை என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment