பொதுவாக செல்வந்தர்கள் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் போன்றவர்களுக்கு அதிக பாதுகாப்பு வசதிகள்
கொடுக்கப்படுகிறது. மேலும் சில உயர் துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு
உளவுத்துறை போன்ற அமைப்புகள் யாருக்கும் தெரியாமல் ரகசிய பாதுகாப்பை
கொடுத்துக்கொண்டிருக்கும். அப்படி அமெரிக்க
உளவுத் துறை பற்றிய பிரமிக்க வைக்கும் தகவல்களை இங்கு காணலாம்.
அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டன் டிசியில் உள்ள H என்ற வீதியில் அமைதியாகவும், மற்ற யாராலும் கண்டுகொள்ளப்படாத வகையில் உள்ள
இந்த கட்டிடம் தான் அந்நாட்டு உளவுத்துறையின் ரகசிய அலுவலகமாக இருக்கலாம் என
கூறப்படுகிறது. ஏனென்றால் 9 மாடிக்
கட்டிடமான இதற்கு பெயரும் இல்லை மக்கள் நடமாட்டமும் இல்லை. ஆனால் இந்த இடத்தில்தான் பல அதிநவீன
தொழில்நுட்பம் உடைய ஆயுதங்கள் இருப்பதாகவும் வீர்ர்கலுக்கு சிறப்பு பயிற்சிகளும்
அளிக்கப்படுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
5. ஆயுதங்கள் (Weapons)
ஒரு நாட்டின் ஜனாதிபதியை பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பதால் மிக அதிநவீன
தொழில்நுட்பம் வாய்ந்த ஆயுதங்களை தான் இவர்கள் பயன்படுத்துவார்கள். அந்த ஆயுதங்கள்
நாளுக்குநாள் மேம்பட்டு கொண்டே இருக்கும். இதற்கென தனி ஆராய்ச்சி குழு அமைக்கப்
பட்டிருக்கும். மேலும் பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் அணிந்திருக்கும் ஒவ்வொரு
பொருட்களின் பின்னணியிலும் ஒரு காரணம் ஒளிந்திருக்கும். எடுத்துக்காட்டாக
கூலிங்கிளாஸ், இவர்கள் அணிந்து இருக்கும் கருப்பு நிற கண்ணாடியின் உதவியால் அவர்கள்
யாரை கண்காணிக்கிறார்கள் என மற்றவர்களுக்கு தெரியாது. ஏதேனும் வெடிபொருட்கள்
வண்ணங்கள் போன்றவைகளை முகத்தில் அடித்து திசைதிருப்ப முயன்றாலும், பார்வை நன்றாக
தெரியும். மேலும் கருப்பு நிற உடையில் அதிநவீன ஆயுதங்கள், புல்லட் புரூப் சூட் என
பலவற்றை மறைத்து வைத்துக் கொள்ள முடியும். இப்படி பல காரணங்களை கூறிக்கொண்டே
போகலாம்.
4. புத்திசாலித்தனம் (Intelligence)
ஆரம்ப காலங்களில் ராணுவத்தில் உள்ள மிகச்சிறந்த, திறமையான மற்றும்
நம்பிக்கைக்குரிய வீரர்களை இதுபோன்ற பணிக்கு தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் சமீப
காலமாக இதற்கென தனி அமைப்பை ஏற்படுத்தி புத்திசாலித்தனமாகவும், திறமை
வாய்ந்தவர்களாகவும் இருப்பவர்களை பல கட்ட தேர்வுகளுக்கு பிறகு தேர்ந்தெடுத்துக்
கொள்கிறார்கள்.
3. உறுதிமொழி (Pledge)
உளவுத் துறையில் இருப்பவர்கள் தான் இதைச் செய்வேன் இதைச் செய்ய மாட்டேன் என
உறுதிமொழி எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தான் பாதுகாக்க வேண்டியவர்களுக்காக
தன் உயிரையும் அர்ப்பணிக்க தயங்கமாட்டார்கள். எதிரிகள் சுடும்போது அந்த தோட்டாவை
தன் உடல் தடுத்து பாதுகாக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். பயிற்சியின்போது
போலியான துப்பாக்கி குண்டுகளை சுடுவதன் மூலம் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கு
ஏற்றார்போல தகுதியை கணக்கிடுவார்கள். 1981-இல் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரேகன் ஐ கொல்ல முயற்சி நடந்தபோது,
அவருடன் பாதுகாப்பிற்காக இருந்தவர், அதிபரின் பெல்ட்டை இழுத்து அவரை காருக்குள்
தள்ளிவிட்டு, துப்பாக்கி குண்டை தன் உடலில் வாங்கி கொண்டார். இதில் ரொனால்ட் ரேகன்
சாதாரண அடியுடன் தப்பினார்.
2. பாதுகாப்பு நடவடிக்கை (Safety Precautions)
அதிபர் ஏதேனும் புதிய இடத்திற்கோ அல்லது கூட்டத்திற்கு செல்லும் போது இவர்களது
பாதுகாப்பு நடவடிக்கை மிக மோசமானதாக இருக்கும். கூட்டம் நடக்கும் இடத்திற்கு முதல்
நாளே சென்று அங்கு உள்ள ManHole எனப்படும் பாதாள
சாக்கடை திறப்புகளை திறக்க முடியாதபடி தரையுடன் ஒட்டி விடுவார்கள்.
அந்த பகுதியை சுற்றி உள்ள அஞ்சல் பெட்டி போன்றவைகளையும் ,அருகாமையில் உள்ள
வீடுகளின் கதவுகளையும் திறந்து மூடாத படி செய்துவிடுவார்கள். பின் சுற்றியுள்ள
வீடுகளின் மாடியில் அதிநவீன ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் பதுங்கி விடுவார்கள்.
ஏதேனும் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பை பார்க்க செல்லும்போது பயண நேரத்தை
முடிந்த அளவிற்கு குறைத்து விடுவார்கள்.
1. போக்குவரத்து (Transportation)
அதிபர் காரில் பயணம் செய்யும்போது 30 கார்கள் ஒன்றாகவே செல்லும். இதில் பல கார்களில் அதிநவீன ஆயுதங்களுடன் வீரர்கள்
இருப்பார்கள். கடைசி வண்டியில் தொலைத் தொடர்பு வசதி பொருத்தப்பட்டிருக்கும்.
மற்றும் ஒரு காரில் மருத்துவ வசதிகளுடன் தலைசிறந்த டாக்டர்கள் இருப்பார்கள். 2001
இல் நடந்த ட்வின் டவர்
அட்டாக்-இற்குப் பிறகு சுற்றியுள்ள தொலைத்தொடர்பு சிக்னல்களை தடைசெய்யும்
வசதியுடன் கூடிய ஒரு காரும் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளது. மேலும் அதிபர் செல்லும்
கார் போலவே மூன்று கார்கள் ஒன்றாக செல்வதால், எந்த காரில் அதிபர் இருப்பார்? என்ற
குழப்பம் ஏற்படும். வான் வழியாக பயணம் மேற்கொள்ளும்போது மெரைன்-1 என்ற அதிநவீன
பாதுகாப்பு ஹெலிகாப்டரில் தான் பயணம் நடைபெறும். இந்த மெரைன்-1 எந்தவித திடீர்
இயற்கை சீற்றத்தையும் சமாளித்து பறக்கக் கூடியது. மேலும், பல இடங்களிலும் கேடர்
என்ற தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுவட்டாரத்தில் என்ன உள்ளது என ஆராய்ந்து
பார்க்கும் வசதி கொண்டது இந்த ஹெலிகாப்டர்.
No comments:
Post a Comment