HybridAnalyzer Tamil: Auto Info

Hot

Showing posts with label Auto Info. Show all posts
Showing posts with label Auto Info. Show all posts

Monday, 23 July 2018

விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல புளு ஆர்ஜின் நிறுவனம் விரைவில் தயார் | Amazon's Blue Orgin Details in Tamil

July 23, 2018 0
புளு ஆர்ஜின் (Blue Origin) என்னும் அமெரிக்க தனியார் நிறுவனம், குறைந்த செலவில் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் வாசிங்டன்னில் உள்ள கென்ட் (Kent) நகரில் அமைந்துள்ளது. ஜெஃப் பெஜோஸ் (Jeff Bezos) என்பவரால் 2000 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் புகழ்ப் பெற்ற முக்கிய நாளிதழான 'தி வாசிங்டன் போஸ்ட்’ (Washington Post) என்னும் தினப்பத்திரிகை நிறுவனத்தின் உரிமையும் தற்போது ஜெஃப் பெஜோஸிடம்தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Third party image reference
புளு ஆர்ஜின் (Blue Origin) நிறுவனம் விண்வெளி ஓடங்களையும் (Space flight), விண்வெளி வாகனங்களுக்குத் தேவையான பொருட்களையும் தயாரிக்கிறது. பயணிகளை மிகப் பாதுகாப்பாக விண்வெளிக்கு அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வருவதற்கான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுக்காக நியூ செப்பர்டு (New Shepard) என்னும் பெயரில் ராக்கெட்டை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பிச் சோதித்து வருகிறது. விண்வெளிக்கு முதன் முதலாகச் சென்ற அமெரிக்க வீரரான ஆலன் செப்பர்டு (Alan Shepard) என்பவரின் நினைவாக ராக்கெட்டுக்கு “நியூ செப்பர்டு” என்று பெயர் வைத்துள்ளது இந்த நிறுவனம்.
Third party image reference
ஆலன் செப்பர்டு 1961 ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்றார். 1971 ஆம் ஆண்டு நிலவில் நடந்தார்.பல சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்ட நியூ செப்பர்டு ராக்கெட் ஒன்பதாவது முறையாக கடந்த புதன்கிழமையன்று ஒரு வகையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. விண்வெளி வாகனத்தின் பாதுகாப்பு தொடர்பான இந்தச் சோதனையின் வெற்றியைப் பொறுத்துதான் புளு ஆர்ஜின் நிறுவனத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறவிருக்கின்றன.
Third party image reference
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இந்நிறுவனத்தின் ஏவு தளத்திலிருந்து காலை 11 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளிப் பயணத்தின் போது ஏதேனும் அபாயகரமான சூழல் ஏற்பட்டால் பயணிகளைக் காப்பாற்றுவது எப்படி? என்கின்ற சோதனை அப்பொழுது மேற்கொள்ளப்பட்டது.
Third party image reference
ராக்கெட் விண்வெளிக்குள் நுழைந்தவுடன், பயணிகளைச் சுமந்திருக்கும் "கேப்ஸ்யூல்" பகுதியில் அமைந்துள்ள மோட்டார் இயங்கத் தொடங்கும். இதனால் பூஸ்டரை விட்டு கேப்ஸ்யூல் விலகி வந்துவிடும். இதனால் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்தச் சோதனையின் வெற்றியால், இந்த ஆண்டின் இறுதிக்குள் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற புளு ஆர்ஜின் நிறுவனத்தின் திட்டம் நிறைவேறவிருக்கிறது.அடுத்த ஆண்டு முதல் குறுகிய தூரம் வரை விண்வெளிக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கில் விண்வெளி வாகனங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது ஆர்ஜின் நிறுவனம். அதற்கான டிக்கெட்டுக்களை விற்க புளு ஆர்ஜின் நிறுவனம் தயாராகிவிட்டது. பூமியிலிருந்து விண்வெளியை நோக்கி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை செல்லும் பயணிகள் தங்களின் எடைகுறைந்து போவதை உணர்வார்கள். அங்கிருந்து வளைந்த வடிவிலான பூமியைப் பார்த்துப் பிரமிப்பார்கள் என புளு ஆர்ஜின் நிறுவனம் கூறுகிறது. இதற்கான டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என இந்நிறுவனம் கூறுகிறது.
Third party image reference
இதுலயும் போட்டி உண்டுபுளு ஆர்ஜின் நிறுவனத்தைப் போலவே, அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான வெர்ஜின் கலாக்டிக் (Virgin Galactic) நிறுவனமும் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது. இது வரை 700 நபர்கள் விண்வெளிப் பயணத்திற்குப் பதிவு செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கானக் கட்டணம் 250,000 டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ஏறக்குறைய 1.7 கோடி ரூபாயாகும்.கடந்த வாரம் அனுப்பிய நியூ செப்பர்டு ராக்கெட் பயணத்தில் பல்வேறு வகையான அறிவியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்வெளியில் வைஃபை உதவியுடன் இணையத் தொடர்பு பெறுவதற்கான முயற்சியும் அவற்றுள் ஒன்று. விண்வெளிக்குப் பயணிகள் ராக்கெட்டில் பயணிக்கும் பொழுது அவர்கள் அமர்ந்திருக்கும் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை விளக்குவதற்காக, "Mannequin Skywalker" என்னும் பெயரில் ஒரு மனித உருவ பொம்மையை ராக்கெட்டில் வைத்து அனுப்பியது புளு ஆர்ஜின் நிறுவனம்.
Third party image reference

Read More

2018-ன் டாப் 10 குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகள்.

July 23, 2018 0

ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஏபிஎஸ் என்று சொல்லப்படக்கூடிய ஆட்டோமெட்டிக் பிரேக்கிங் சிஸ்டம். வாகனங்கள் விபத்தில் சிக்க காரணமாகன பிரேக்கிங் சிஸ்டத்தை இது சிறப்பாக கண்ட்ரோல் செய்வதால் இதை பலர் விரும்புகின்றனர். விரைவில் 125 சிசிக்கு அதிகமாக உள்ள பைக்குகளில் கட்டாயம் ஏபிஎஸ் அமைக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவில் விதியாக கூட வரலாம். இதை கருத்தில் கொண்டே பல நிறுவனங்கள் இந்த ரக வாகனங்களில் ஏபிஎஸ் வசதியை கொண்டு வந்து விட்டனர். குறைந்தபட்சம் ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனாகவாவது இருக்கிறது.


அந்த வகையில் இந்தியாவில் விற்பனையாககூடி பைக்குகளில் குறைந்த விலை ஏபிஎஸ் பைக்குகளை பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் ஏபிஎஸ் பைக்கை வாங்க விரும்பினால் நிச்சயம் இந்த பட்டியல் உங்களுக்கு உதவும்.
1.ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்- ரூ 88,000


ஹீரோ நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள இந்த பைக்கை ரூ 88,000 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்கிறது.200 சிசிக்கு ரக பைக்குகளில் குறைந்த விலை பைக் இது தான். இதில் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றம் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 200 சிசி ஒரு சிலிண்டர், 4 ஸ்டோக், ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 18.4 பிஎஸ் பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதில் 5ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
2.சுஸூகி ஜிக்ஸர் 155- ரூ 87,250


அடுத்த குறைந்த விலை ஏபிஎஸ் பைக் என்றால் இது தான். இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்தான் பொருத்தப்பட்டுள்ளத. இது 155 சிசி சிங்கிள் சிலிண் இன்ஜின் உடன் வருகிறது. இது 14.8 பிஎச்பி பவரையும் 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.
3.சுஸூகி இன்ட்ரூடர் 150- ரூ 99,995


இந்த பட்டியலில் உள்ள ஒரே க்ரூஸியர் பைக் இதுதனா். இந்த இன்ட்ரூடர் 150 பைக் இன்ட்ரூடர் எம்1800 பைக்கின் மினி வெர்ஷன் தான். இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், பொருத்தப்பட்டுள்ளது. இதில் கர்பரேட்டர், மற்றும் பியூயல் இன்ஜெக்டர் ஆகிய 2 விதமான வேரியன்களில் வெளியாகிறது. இதன் இன்ஜினைபொருத்தவரை ஜிக்ஸர் பைக்கைல் உள்ள அதே 155 சிசி சிங்கிள் சிலிண் இன்ஜின் உடன் வருகிறது. இது 14.8 பிஎச்பி பவரையும் 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.
4.டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 - ரூ 99,880


டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் வரக்கூடிய பைக்கில் குறைந்த விலை பைக் இது தான். இதில் 177.4 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 16.62 பிஎச்பி பவரையும், 15.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
5.சுஸூகி ஜிக்ஸர் எஸ்எப்- ரூ 96,386


சுஸூகி நிறுவனத்தின் ஜிக்ஸர் 155, இன்ட்ரூடர் 150 ஆகிய பைக்குகளை போல ஜிக்ஸர் எஸ்எப் பைக்கும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசிதியை கொண்டது தான். இதிலும் ஜிக்ஸர் 155 ல் உள்ள அதே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த விலையில் சிறப்பான லுக் கொண்ட பைக் இது தான்.
6.ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் - ரூ 90,735


இந்த ஹோண்டா சிபி ஹார்னட்டை பொருத்தவரை ஜிக்ஸர் பைக்கிற்கு நேரடி போட்டியாக திகழ்கிறது. ஹார்னட்டிலும் சிங்கிள் சேனல் ஏபிஎ் வசதிதான் இருக்கிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை 162.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 15.7 பிஎச்பி பவரையும், 14.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.
7.பஜாஜ் பல்சர் என்எஸ் 200- ரூ 1.09 லட்சம்

பஜாஜ் நிறுவனத்தின் குறைந்த விலை ஏபிஎஸ் பைக் இது தான். இந்த 200 என்எஸ் பைக் 199.5 சிசி, லிக்யூட் கூலண்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உடன் வருகிறது. இது 23.17 பிஎச்பி பவரையும், 18.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் குறைந்த பட்ச பராமரிப்பு செலவையே ஏற்கிறது.
8.பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200- ரூ 1.37 லட்சம்


பல்சர் ஆர்எஸ்200 பைக் என்பது என்எஸ் 200 பைக்கில் இருந்து சில வடிவமைப்பு மாற்றங்களையே கொண்டுள்ளது. இதிலும் 199.5 சிசி, லிக்யூட் கூலண்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உடன் வருகிறது. இது 24..5 பிஎச்பி பவரையும், 18.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி மட்டுமே இருக்கிறது.
9.டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி -1.07 லட்சம்


அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கை போலவே ஆர்டிஆர் 200 பைக்கிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்பிப்பரி கிளட்ச் ஸ்டாண்டர்டாக வருகிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை 197.75 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது கார்பரேட்டர் வெர்ஷனில் 20.5 பிஎச்பி பவரையும், பியூயல் இன்ஜெக்டர் வெர்ஷனில் 21 பிஎச்பி பவரையும், இரண்டு வெர்ஷனிலும் 18.1 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.
10.பஜாஜ் டோமினோர் 400 - ரூ 1.62 லட்சம்



இந்தபட்டியலிலேயே விலை உயர்ந்த பைக் இது தான். பஜாஜ் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு இந்த பைக் தான். இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இன்ஜின்னை பொருத்தவரை 373.3 சிசி சிங்கிள் சிலிண்டர் பியூயல் இன்ஜெக்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கேடிஎம் டியூக் 390 பைக்கில் உள்ளது போலவே இதன் இன்ஜினும் உள்ளது. இது 35 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
Read More