விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல புளு ஆர்ஜின் நிறுவனம் விரைவில் தயார் | Amazon's Blue Orgin Details in Tamil - HybridAnalyzer Tamil

Hot

Monday, 23 July 2018

விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல புளு ஆர்ஜின் நிறுவனம் விரைவில் தயார் | Amazon's Blue Orgin Details in Tamil

புளு ஆர்ஜின் (Blue Origin) என்னும் அமெரிக்க தனியார் நிறுவனம், குறைந்த செலவில் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் வாசிங்டன்னில் உள்ள கென்ட் (Kent) நகரில் அமைந்துள்ளது. ஜெஃப் பெஜோஸ் (Jeff Bezos) என்பவரால் 2000 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் புகழ்ப் பெற்ற முக்கிய நாளிதழான 'தி வாசிங்டன் போஸ்ட்’ (Washington Post) என்னும் தினப்பத்திரிகை நிறுவனத்தின் உரிமையும் தற்போது ஜெஃப் பெஜோஸிடம்தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Third party image reference
புளு ஆர்ஜின் (Blue Origin) நிறுவனம் விண்வெளி ஓடங்களையும் (Space flight), விண்வெளி வாகனங்களுக்குத் தேவையான பொருட்களையும் தயாரிக்கிறது. பயணிகளை மிகப் பாதுகாப்பாக விண்வெளிக்கு அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வருவதற்கான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுக்காக நியூ செப்பர்டு (New Shepard) என்னும் பெயரில் ராக்கெட்டை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பிச் சோதித்து வருகிறது. விண்வெளிக்கு முதன் முதலாகச் சென்ற அமெரிக்க வீரரான ஆலன் செப்பர்டு (Alan Shepard) என்பவரின் நினைவாக ராக்கெட்டுக்கு “நியூ செப்பர்டு” என்று பெயர் வைத்துள்ளது இந்த நிறுவனம்.
Third party image reference
ஆலன் செப்பர்டு 1961 ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்றார். 1971 ஆம் ஆண்டு நிலவில் நடந்தார்.பல சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்ட நியூ செப்பர்டு ராக்கெட் ஒன்பதாவது முறையாக கடந்த புதன்கிழமையன்று ஒரு வகையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. விண்வெளி வாகனத்தின் பாதுகாப்பு தொடர்பான இந்தச் சோதனையின் வெற்றியைப் பொறுத்துதான் புளு ஆர்ஜின் நிறுவனத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறவிருக்கின்றன.
Third party image reference
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இந்நிறுவனத்தின் ஏவு தளத்திலிருந்து காலை 11 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளிப் பயணத்தின் போது ஏதேனும் அபாயகரமான சூழல் ஏற்பட்டால் பயணிகளைக் காப்பாற்றுவது எப்படி? என்கின்ற சோதனை அப்பொழுது மேற்கொள்ளப்பட்டது.
Third party image reference
ராக்கெட் விண்வெளிக்குள் நுழைந்தவுடன், பயணிகளைச் சுமந்திருக்கும் "கேப்ஸ்யூல்" பகுதியில் அமைந்துள்ள மோட்டார் இயங்கத் தொடங்கும். இதனால் பூஸ்டரை விட்டு கேப்ஸ்யூல் விலகி வந்துவிடும். இதனால் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்தச் சோதனையின் வெற்றியால், இந்த ஆண்டின் இறுதிக்குள் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற புளு ஆர்ஜின் நிறுவனத்தின் திட்டம் நிறைவேறவிருக்கிறது.அடுத்த ஆண்டு முதல் குறுகிய தூரம் வரை விண்வெளிக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கில் விண்வெளி வாகனங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது ஆர்ஜின் நிறுவனம். அதற்கான டிக்கெட்டுக்களை விற்க புளு ஆர்ஜின் நிறுவனம் தயாராகிவிட்டது. பூமியிலிருந்து விண்வெளியை நோக்கி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை செல்லும் பயணிகள் தங்களின் எடைகுறைந்து போவதை உணர்வார்கள். அங்கிருந்து வளைந்த வடிவிலான பூமியைப் பார்த்துப் பிரமிப்பார்கள் என புளு ஆர்ஜின் நிறுவனம் கூறுகிறது. இதற்கான டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என இந்நிறுவனம் கூறுகிறது.
Third party image reference
இதுலயும் போட்டி உண்டுபுளு ஆர்ஜின் நிறுவனத்தைப் போலவே, அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான வெர்ஜின் கலாக்டிக் (Virgin Galactic) நிறுவனமும் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது. இது வரை 700 நபர்கள் விண்வெளிப் பயணத்திற்குப் பதிவு செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கானக் கட்டணம் 250,000 டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ஏறக்குறைய 1.7 கோடி ரூபாயாகும்.கடந்த வாரம் அனுப்பிய நியூ செப்பர்டு ராக்கெட் பயணத்தில் பல்வேறு வகையான அறிவியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்வெளியில் வைஃபை உதவியுடன் இணையத் தொடர்பு பெறுவதற்கான முயற்சியும் அவற்றுள் ஒன்று. விண்வெளிக்குப் பயணிகள் ராக்கெட்டில் பயணிக்கும் பொழுது அவர்கள் அமர்ந்திருக்கும் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை விளக்குவதற்காக, "Mannequin Skywalker" என்னும் பெயரில் ஒரு மனித உருவ பொம்மையை ராக்கெட்டில் வைத்து அனுப்பியது புளு ஆர்ஜின் நிறுவனம்.
Third party image reference

No comments:

Post a Comment