அர்த்துஷ் வாஸ்கன்யன் என்பவர் 1966-ம் ஆண்டு துருக்கியின் அரரட் பகுதியில்
உள்ள வெடி எனும் ஊரில் பிறந்தார். ஓவிய கலையின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தன்
ஊரில் இருந்த ஒரு கலைக்கல்லூரியில் சேர்ந்து தனது ஓவிய கலை படிப்பை 1980 ஆம் ஆண்டு
முடித்து பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற சிறிது காலத்திலேயே ஒரு புகழ் பெற்ற ஓவிய
கலைஞர் என்ற நிலையை அடைந்தார். இதனால் இவரது பெயரையே இவர் படித்த கல்லூரிக்கு
வைத்தார்கள்.
16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Giuseppe Archimboldo என்ற புகழ்பெற்ற இத்தாலிய ஓவிய கலைஞரின் மீது அதிக பற்று
கொண்டிருந்ததால் அவரது பாணியை பின் பற்றியே பல ஓவியங்களை இவர் வரைந்துள்ளார்.
இவர் தன் ஓவியங்களை வைத்து
அர்மேனியா, பெலேரஸ், அர்ஜென்டீனா, அமெரிக்கா, பிரான்ஸ் என பல நாடுகளில்
கண்காட்சிகளை நடத்தி பல விருதுகளை பெற்றுள்ளார்.
இன்று இவரது சாதாரண
ஒரு ஓவியம் கூட குறைந்தது 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவரது சிறந்த
படைப்புகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. வான்கோழி,முயல்,முட்டை கோஸ் மூலம் பெண் உருவம்.
2. மயில் மற்றும் மயில் தோகையால் பெண் உருவம்.
3. கடல் சிங்கம்,கடல் பாசி மற்றும் மீன்-ஆல் ஆன பெண் உருவம்.
4. குதிரை,ஆண்,ஒரு அழகான இடம் மற்றும் ஒரு பெண் மூலம் பெண்ணின் முகம்.
5. அரன்மனை விரிப்புகள் மூல பெண் உருவம்.
6. ஒரு நரி இரண்டு பறவைகளை பிடிக்க அதன் மூலம் பெண் முகம்.
7. தேவதை தராசுடன் எருது மேல் நிற்க்க ஆண் முகம்.
8. நீரில் நிற்க்கும் பறவை மற்றும் அதனை சுற்றியுள்ள கொடிகள் மூலம் பெண் உருவம்.
9. கருஞ்சிருத்தை மற்றும் ஆந்த்தை மூலம் பெண் உருவம்.
10. ராணியின் கையில் இருக்கும் கழுகு மற்றும் பாலைவன வெடிப்பினால் ஒரு பெண் முகம்.
11. பறவைகள் மற்றும் சுற்றியுள்ள செடி கொடிகளால் பெண் உருவம்
12. பூனை எலியை பிடிக்க மற்றும் கீழே உள்ள துணியின் மூலம் பெண் உருவம்.