HybridAnalyzer Tamil: Drawings

Hot

Showing posts with label Drawings. Show all posts
Showing posts with label Drawings. Show all posts

Sunday, 29 September 2019

பிரபலமான 5 ஓவியங்களில் மறைந்துள்ள மர்மங்கள் | Mysterious Things Hidden in Famous Paintings

September 29, 2019 0

ஒரு காலத்தில் வரையப்பட்ட சில ஓவியங்கள் மிகப் புகழ் பெற்றதாகவும், விலைமதிப்பற்றதாகவும் மேலும், அதை வரைந்தவர்களுக்கு மிகப் பெரிய படைப்பாளி என்ற அந்தஸ்தையும் பெற்றுத் தந்தன.

அதனால் தான் பல நூறு வருடங்கள் ஆன பின்பு, இன்றளவும் அந்த ஓவியங்கள் அருங்காட்சியகத்திலும் சிறந்த சேகரிப்பாளர்கள் மூலமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அப்படி பிரபலமாக உள்ள சில ஓவியங்களில் மறைந்துள்ள மர்மங்களை பற்றி தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

5. சிஷ்டின் சேப்பல் (Sistine chapel)

இது வாடிகன் சிட்டியில் உள்ள அரண்மனை ஒன்றின் சீலிங்கில் 1508 முதல் 1612 வரையிலான காலத்தில் வரைய பட்ட ஓவியம் ஆகும். மைக்கேல் ஏஞ்சலோ என்ற புகழ்பெற்ற ஓவியரால் தான் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் பைபிளில் ஆதாம்-ஏவாள் ஆல் மனித இனம் பூமியில் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை காட்சிப் படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த ஓவியத்தின் வலது புறத்தில் உள்ள நீள்வட்ட வடிவம் மனித மூளையின் வடிவத்துடன் ஒத்துப்போகிறது. 1500-களில் ஆராய்ச்சி என்பது பைபிளுக்கு எதிரான குற்றச் செயலாக கருதப்பட்டது. மேலும், அந்த சமயத்தில் மூளையின் வடிவமைப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சரியாக மனிதர்களைப் போலவே வரைந்து இருப்பது சற்று பிரமிப்பாக தான் உள்ளது.

4. இரவு நேர உணவக ஓவியம் (Café Terrace at Night)

1800-களில் வின்சன்ட் வேன் கோ என்ற புகழ்பெற்ற ஓவியரால் வரையப்பட்ட ஓவியம் தான் இது. இதில் தெற்கு பிரான்சில் உள்ள ஒரு சிற்றுண்டி விடுதியில் இயேசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன் தனது பன்னிரண்டு சீடர்களுடன் சேர்ந்து கடைசியாக சாப்பிட்ட உணவை குறிப்பிடுவதுபோல உள்ளது.

சிலர் இது பார்ப்பதற்கு அது போல இல்லை என்றும் சிலர் எதிர்பாராத விதமாக வரையப்பட்டு இருக்கலாம் எனவும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இந்த ஓவியர் மிகுந்த மதச்சார்பு உடையவராக இருந்ததால், தெரிந்தே வரைந்து இருக்கலாம் எனவும் பெரும்பாலும் சொல்லப்படுகிறது.

3. பிரபஞ்சத்தை ஆளும் மனிதன் (Man controller of universe)

இந்த ஓவியம் புகழ்பெற்ற எண்ணெய் வியாபாரியான ராக் பெல்லரின் குடும்பத்திற்காக diego rivera என்ற ஓவியரால் 1933-இல் வரையப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஓவியத்தில் கம்யூனிச தலைவரான விலாடிமிர் லெனின் என்பவரின் படம் இடம் பெற்று அவர்களது கொண்டாட்டமும் இடம் பெற்றிருந்ததால், அது பிடிக்காத நெல்சன் ராக்பெல்லர் அதை நீக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், ஓவியர் அதை மறுத்துவிட்டார். அதனால் ஓவியத்தின் குறிப்பிட்ட இடம் சேதப்படுத்தப்பட்டு அதன்மேல் வேறு சில வண்ணங்கள் பூசப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஓவியர் ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வைத்து மெக்ஸிகோ சென்று அந்த ஓவியத்தை மீண்டும் வரைந்துவிட்டார். இப்போது கேள்வி என்னவென்றால் வித்தியாசமான முறையில் உலகை ஆளும் வகையில் வரையப்பட்ட இதில் கம்யூனிச தலைவர் லெனினின் ஏன் இடம்பெற்றர் என்பதுதான். மேலும், இதன் இடது புறத்தில் நுண்ணோக்கி மூலம் கிருமிகள் பார்க்கப்படுவது போல காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

2. கடைசி விருந்து (The last supper)

புகழ்பெற்ற ஓவியரான லியானார்டோ டாவின்சியின் ஒரு சிறந்த படைப்பு தான் இது. 1495-ல் வரைய ஆரம்பித்து அடுத்த மூன்று வருடங்களில் இந்த ஓவியத்தை அவர் வரைந்துள்ளார். இவர் இயேசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக எடுத்துக்கொண்ட விருந்து பற்றி தனக்கு கிடைத்த செய்திகள் மூலம் இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். இவர் வரைந்த அசல் படம் இத்தாலியிலுள்ள மிலான் என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் தான் வைக்கப்பட்டுள்ளது.

இதனை நேரில் காண வருடத்திற்கு 25 நபர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் இயேசுவின் இடது புறத்தில் மூன்றாவதாக உள்ள நபர் மேரி மேக்தலின் எனும் யூதப் பெண்மணி. ஆனால், இயேசுவின் கடைசி விருந்தில் தனது பன்னிரண்டு சீடர்களுடன் தான் உணவு உட்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பன்னிரண்டு சீடர்களில் மேரி என்ற பெண் கிடையாது. ஏதோ ஒரு சீடருக்கு பதில் இவரை வரைந்துள்ளார். வருடத்திற்கு 25 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் அந்த ஓவியத்தை யாராலும் ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. மேலும், அதில் இடம் பெற்றிருக்கும் நபர்களின் விரல் வைக்கும் இடமானது ஒரு சோகமான இசையை குறிப்பிடுவதாக உள்ளது. இதேபோன்ற இசையை தனது டைரியிலும் லியானார்டோ குறிப்பிட்டுள்ளார்.

1. மடோனா குழந்தை பற்க்கும் தட்டு ஓவியம் (Madona child UFO)

இதை 1400-களில் வாழ்ந்த Domenico Ghirlandaio என்பவர் வரைந்துள்ளார். இவருக்கு கீழ் தான் முன்பு பார்த்த sistine chapel ஓவியத்தை வரைந்த மைக்கேல் ஏஞ்சலோ வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியத்தில் மடோனா என்ற பெண் ஒரு குழந்தையை வணங்குவது போல உள்ளது. அதற்கு பின்னால் உள்ள UFO போன்ற இந்த அமைப்புதான் இதில் உள்ள மர்மம். பார்ப்பவர்கள் அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் இது வரையப்பட்டுள்ளது.

சிலர் இதனை பறக்கும்தட்டு தான் என்றும் சிலர் அரைகுறையாக வரையப்பட்ட கிரகமாக இருக்கலாம் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

Read More

Saturday, 28 September 2019

ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வைக்கும் 12 அற்புதமான ஓவியங்கள் || 12 Most Amazing Drawings of Aurtush Voskanyan

September 28, 2019 0

அர்த்துஷ் வாஸ்கன்யன் என்பவர் 1966-ம் ஆண்டு துருக்கியின் அரரட் பகுதியில் உள்ள வெடி எனும் ஊரில் பிறந்தார். ஓவிய கலையின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தன் ஊரில் இருந்த ஒரு கலைக்கல்லூரியில் சேர்ந்து தனது ஓவிய கலை படிப்பை 1980 ஆம் ஆண்டு முடித்து பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற சிறிது காலத்திலேயே ஒரு புகழ் பெற்ற ஓவிய கலைஞர் என்ற நிலையை அடைந்தார். இதனால் இவரது பெயரையே இவர் படித்த கல்லூரிக்கு வைத்தார்கள்.


16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Giuseppe Archimboldo என்ற புகழ்பெற்ற இத்தாலிய ஓவிய கலைஞரின் மீது அதிக பற்று கொண்டிருந்ததால் அவரது பாணியை பின் பற்றியே பல ஓவியங்களை இவர் வரைந்துள்ளார்.
இவர் தன் ஓவியங்களை வைத்து அர்மேனியா, பெலேரஸ், அர்ஜென்டீனா, அமெரிக்கா, பிரான்ஸ் என பல நாடுகளில் கண்காட்சிகளை நடத்தி பல விருதுகளை பெற்றுள்ளார்.


இன்று இவரது சாதாரண ஒரு ஓவியம் கூட குறைந்தது 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவரது சிறந்த படைப்புகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. வான்கோழி,முயல்,முட்டை கோஸ் மூலம் பெண் உருவம். 



2. மயில் மற்றும் மயில் தோகையால் பெண் உருவம்.



3. கடல் சிங்கம்,கடல் பாசி மற்றும் மீன்-ஆல் ஆன பெண் உருவம்.



4. குதிரை,ஆண்,ஒரு அழகான இடம் மற்றும் ஒரு பெண் மூலம் பெண்ணின் முகம்.



5. அரன்மனை விரிப்புகள் மூல பெண் உருவம்.




6. ஒரு நரி இரண்டு பறவைகளை பிடிக்க அதன் மூலம் பெண் முகம்.



7. தேவதை தராசுடன் எருது மேல் நிற்க்க ஆண் முகம்.




8. நீரில் நிற்க்கும் பறவை மற்றும் அதனை சுற்றியுள்ள கொடிகள் மூலம் பெண் உருவம். 



9. கருஞ்சிருத்தை மற்றும் ஆந்த்தை மூலம் பெண் உருவம்.



10. ராணியின் கையில் இருக்கும் கழுகு மற்றும் பாலைவன வெடிப்பினால் ஒரு பெண் முகம்.



11. பறவைகள் மற்றும் சுற்றியுள்ள செடி கொடிகளால் பெண் உருவம்


12. பூனை எலியை பிடிக்க மற்றும் கீழே உள்ள துணியின் மூலம் பெண் உருவம்.




Read More