சென்னை என்ற நகரை அவ்வளவு எளிதான சாதாரண நகரம் என கூறிவிட முடியாது. இந்தியாவின் முன்னணி நகரங்களுள் ஒன்றான இது தமிழகத்தின் தலைமையாக செயல்படுகிறது. அப்படிப்பட்ட சென்னையை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 22 உண்மைகளை தான் தற்போது பார்க்கப் போகின்றோம்.
1. உலகின் மிகவும் பழமையான நகராட்சிகளில் லண்டனை தொடர்ந்து சென்னை இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இது உருவாக்கப்பட்டது 1687 இல் கிட்டத்தட்ட முந்நூறு வருடங்கள் கடந்துள்ளது.
2. உலகின் சுற்றுலா சார்ந்த புத்தகங்களை அதிக அளவில் வெளியிடும் lonely planet என்ற நிறுவனம் 2015ம் ஆண்டு வெளியிட்ட உலகின் 10 சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் இது மட்டுமே இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3. பிரிடிஷ் காரர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட மிகப் பழமையான கட்டிடம் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள செயின்ட் மேரி சர்ச் தான். இது கட்டப்பட்டது 1687 -ல்.
4. ஆசியாவின் மிகப்பெரிய ஐடி பார்க் இங்கு உள்ள டைடல் பார்க் தான். ஐடி சம்பந்தப்பட்ட திட்டங்களை ஏற்றுமதி செய்வதிலும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
5. சென்னையின் கடலோரப் பகுதியில் உள்ள கற்களை ஆய்வு செய்ததில் அவை பல நூறு கோடி வருடங்கள் பழமையானதாக இருக்கும் என கருதப்படுகிறது.
6. உலகின் பழமையான சிறைச்சாலைகளில் சென்னை சென்ட்ரல் ஜெயில் உள்ளடங்கும். இது கட்டப்பட்டது 1837 இல் ஆனால் 2009ம் ஆண்டு தகர்க்கப்பட்டது.
7. 1959இல் எல்ஐசி கட்டிடம் கட்டப்பட்ட போது இந்தியாவின் முதல் உயரமான கட்டிடம் சென்னையில் தான் உள்ளது என்ற பெயரைப் பெற்றது.
8. சென்னை உயர்நீதிமன்ற கட்டிடம் தான் உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகும். முதலிடம் லண்டனில் உள்ள ஒரு நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
9. தற்சமயம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவில் உள்ள மிகப் பழமையான ரயில்வே ஸ்டேஷன் நமது சென்னை ராயபுரம் ரயில்வே நிலையம் தான் இது. கட்டப்பட்டது 1856 இல்.
10. வேளச்சேரியில் உள்ள phonex mall தான் இந்தியாவின் மூன்றாவது பெரிய மால். இது சுமார் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது.
11. இந்தியாவின் மொத்த தங்கம் விற்பனையில் 40 சதவீத விற்பனை சென்னையில் தான் நடைபெறுகிறது.
12. உலக அளவில் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரை சென்னை மெரினா கடற்கரை தான். இதன் நீளம் 13 கிலோ மீட்டர்கள். கோடை காலங்களில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் நபர்கள் வரை மெரினாவிற்கு வந்து செல்கிறார்கள்.
13. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் அதிக வேகமாக முன்னேறும் 10 நகரங்களில் சென்னையும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் சென்னை மட்டுமே இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
14. இந்தியாவின் அதிக அளவு வாகன உற்பத்தி சென்னை சுற்றுப் பகுதிகள் சார்ந்தே அமைந்துள்ளது. மேலும் அதிக அளவு மின்னணு உதிரிபாகங்களும் இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக டெட்ராய்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரையும் சென்னை பெற்றுள்ளது.
15. உலக வங்கியின் தலைமை அலுவலகமான வாஷிங்டன் டிசியில் உள்ள கட்டிடத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய உலக வங்கி கட்டிடம் சென்னையில் தான் உள்ளது.
16. இந்தியாவில் முதல் முறையாக வங்கி முறை அறிமுகப்படுத்தப்பட்டது சென்னையில் தான். அவ்வாறு கொண்டுவரப்பட்ட முதல் வங்கி மெட்ராஸ் பேங்க் என அழைக்கப்பட்டது. இது கட்டப்பட்டது 1683 இல். மேலும் இதற்கு அடுத்தபடியாக தான் பேங்க் ஆப் ஹிந்துஸ்தான் மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா முறையே 1770 மற்றும் 1786 கட்டப்பட்டது.
17. ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமாக முதலிடத்தை பிடித்திருப்பது நாம் அறிந்த சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் தான்.
18. சென்னை கப்பல் துறைமுகம் தான் இந்தியா மற்றும் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள மிகப்பெரிய உருவாக்கப்பட்ட கப்பல் துறைமுகம்.
19. சென்னையில் பேருந்து வசதி 1925 இல் தொடங்கப்பட்டது. ஆனால் ஆச்சரியத்தக்க வகையில் இதற்கு எட்டு வருடங்களுக்கு முன்னதாகவே 1917 இல் இருந்து விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.
20. முதல் உலகப் போரின்போது இந்தியாவிலேயே அதிக போர் தாக்குதலுக்கு உள்ளான ஒரே நகரம் சென்னை தான்.
21. உலகின் பழமையான வணிக வளாகங்களில் அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்ஸர் பிளாஸா கட்டிடமும் அடங்கும். இது கட்டப்பட்டது 1863ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
22. மொத்த தென்னிந்திய திரையுலகின் பெருமளவு சினிமா தொழிற்சாலைகள் சென்னையில் தான் உள்ளன. இதில் தமிழ் திரைப்பட தொழிற்சாலை மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்றவையும் அடங்கும்.
Tag: top 22 best facts of Chennai in tamil,
unbelievable facts of Chennai

No comments:
Post a Comment