நடுநடுங்க வைக்கும் அதிரடியான 5 அம்யூஸ்மென்ட்பார்க் ரைடுகள்..! - HybridAnalyzer Tamil

Hot

Sunday, 5 August 2018

நடுநடுங்க வைக்கும் அதிரடியான 5 அம்யூஸ்மென்ட்பார்க் ரைடுகள்..!

Top 5 Dangerous Amusement  park rides in tamil

 
இந்த காலத்தில் சுற்றுலா செல்பவர்கள், மகிழ்சியுடன் சேர்த்து மெய்சிலிர்க்க வைக்க கூடிய விளையாட்டுகளையும் எதிர் பார்க்கின்றார்கள். இதை கவனத்தில் கொண்டு பல முன்னனி நிருவணங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிக பயங்கரமான விளையாட்டு எந்திரங்களை உருவாக்கியுள்ளனர். அவ்வாராக நடுநடுங்க வைக்கும் 5 விளையாட்டுகளை தான் இதில் தொகுத்துள்ளோம்.

5.எக்ஸ் ஸ்கிரீம்
அமெரிக்காவின் சூதாட்ட விடுதிகளுக்கு பெயர் பெற்ற லாஸ்வேகாஸ் நகரில் தான் இது அமைக்க பட்டுள்ளது. பார்ப்பதற்க்கு ரோலர் கோஸ்டர் போன்ற அமைப்பில் இருந்தாலும் அதை விட பல மடங்கு பயத்தை தரக்கூடியதாக உள்ளது. மேலும் 264 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இது திடீரென கீழே விழுவது போல் செயல்படும். தொடர்ந்து மேலும் கீழுமாக செல்வதால் பயனிகளுக்கு மிகுந்த அச்சத்தை தரும்.

4. 500 அடி உயர பாலம்
சீனர்கள் சுற்றுலா பயனிகளை சற்று வித்தியாசமான முறையில் கவர்ந்து வருகிரார்கள், அந்த வகையில் சீனாவின் இரண்டு மலை பகுதிகளுக்கு இடையே அமைக்க பட்டுள்ள ஒரு பாலமானது தரையிலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் உள்ளது. மேலும் கட்டையால் கட்டபட்டிருப்பதால் இடைவெளியும் அதிக அளவில் விடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்க்காக ஒரு கயிற்றை கட்டி கொண்து இதனை கடக்க வேண்டும். அவ்வாரு கடக்கும்போது தவறி விழுந்தும் மேகங்களின் குளிற்ச்சியும் இருக்கும். இது பயனிகளை பெருமளவில் கவர்ந்து வருகிறது.

3.டெரர் டாஃடில்
அமெரிக்காவின் கொலரெடோ பகுதியில் உள்ள வின்ஸ் பார்க்கில் தான் இது அமைக்கப்பட்டுள்ளது. இதில் 200 அடி உயரமுள்ள மலை பகுதியில் தொங்க விட பட்டுள்ள கயிற்றில் கட்டபட்ட இருக்கையில் பயனிகள் அமர வேண்டும். பின்பு அவர்களை அப்படியே தள்ளி விட்டு விடுவார்கள். மிக ஆபத்தான ரைடு இது.
                                
2.ராயல் ரஸ் ஸ்கை கோஸ்டர்
ஆர்கன்சாஸ் என்ற ஆற்றின் மேல் அமைந்துள்ள பாலம் தான் இது. கயிற்றில் கட்டபட்டு 350மீ ஆழத்தின் மேல் ஊஞ்சல் போல ஆடும் வகையில் உருவாக்கபட்டுள்ளது.மணிக்கு சுமார் 80கிலோமீட்டர் வேகத்தில் இதில் அமருபவர்கள் தள்ள படுகின்றனர். 
                               
 
1.எடையில்லா விமானம்
விலையுயர்ந்த உர்ச்சாக பயணம் தான் இது. இதில் சில மற்றங்கள் செய்யபட்ட உண்மையான விமானத்தில் பயனிகளை ஏற்றி மிக அதிக உயத்திற்க்கு கொண்டு சென்று திடீரென செங்குத்தாக கீழ் நோக்கி இறக்குவார்கள், வேகமாக கீழே இறக்கும்போது உள்ளிருக்கும் பயனிகளுக்கு எவ்வித பிடிமானமும் இல்லாமல் காற்றில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்ப்படும். வானில் பறக்க வேண்டும் மிதக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது மிகுந்த உற்ச்சாகத்தை அளிக்க கூடியதாக அமையும்.
                              


No comments:

Post a Comment