தினசரி வாழ்வில் நாம் பல்வேறு கருவிகளையும் பொருட்களையும்
உபயோகப்படுத்துகிறோம். இவை அனைத்தும் உலகில் உள்ள யாரோ ஒருவரால் பல்வேறு காலத்தில்
கண்டுபிடிக்கப்பட்டவை.
அவ்வாறாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளுக்கும்
பின்னால் கண்டிப்பாக ஏதேனும் ஒரு காரணம் தூண்டுகோலாக இருந்திருக்கும். அந்த
வகையில் குழந்தைகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில கருவிகளை பற்றிதான் இப்போது
பார்க்கப் போகிறோம்.
5. பனி வாகனம் (Snow
mobile)
பனி சறுக்கு மைதானங்களில் சிலர் சறுக்கிக் கொண்டும் பனி வாகனத்தில் அமர்ந்து
கொண்டும் செல்வது போன்ற காட்சிகளை திரைப்படங்களில் நீங்கள் பார்த்து இருக்கலாம்.
ஆனால், ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த வண்டியை வடிவமைத்தது 15 வயது சிறுவன் தான் joseph armand என்ற சிறுவன் 1922-ல் தனது தந்தை
கொடுத்த ஓடாத வண்டியில் விளையாட்டு போக்காக பனிச்சரிவில் சருக்கி விளையாடும்
வகையில் கேட்டர்பில்லர் டிராக் எனப்படும் டயர் அமைப்புகளை பொருத்தியுள்ளார். இதை
முதன்முதலாக ஜோசபின் சகோதரரான லியோபோல்ட் பனிச்சரிவில் ஓட்டியுள்ளார். இதுவே
பின்னாளில் 35 வருடங்களுக்கு
பிறகு ஸ்கி டூ என்ற நிறுவனத்தின் பெயரில் சந்தைப்படுத்த பட்டுள்ளது.
கண் தெரியாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் தான் பிரெய்லி.
லூயிஸ் பிரெய்லி என்ற 3 வயது
சிறுவனுக்கு 1812-இல் தனது
தந்தையின் தொழிற்சாலையில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்து
ஏற்பட்டு, அதன் தாக்கத்தால் கண் பார்வையை அவனது 5 வயதில் முழுவதுமாக இழக்க
நேரிட்டது. மிகுந்த அறிவுத்திறன் கொண்ட லூயிஸ் பிரெய்லி, தனது பதினைந்தாம் வயதில் தனக்கு
பிடித்த ஆசிரியர் ஒருவரின் உதவியோடு கண்பார்வையற்றோருக்கான எழுத்து முறையை
உருவாக்கியுள்ளார். முன்னதாக பிரெஞ்சு ராணுவம் சில தகவல்களை ரகசியமாக பாதுகாக்க Barbier's என்ற முறையை பயன்படுத்தினார்கள். அதனை மையமாகக் கொண்டே இவ்வகை எழுத்து முறையை அச்சிறுவன்
உருவாக்கியுள்ளார்.
கோடைகாலத்தில் நமக்கு பிடித்த உணவுகளில் நீங்காத இடம் பிடித்திருப்பது
ஐஸ்கிரீம்கள் தான். பாப்ஸ்சிக்கில்ஸ் எனப்படும் இந்த குச்சி ஐஸ்கல் தான் இப்போது
உள்ள எல்லா ஐஸ்கிரீம்களுக்கும் முன்னோடி. இதனை முதன் முதலில் உருவாக்கியது trank
epperson என்ற 11 வயது சிறுவன் தான். 1905-ல் அமெரிக்காவில்
ஒரு நாள் இரவு பாத்திரம் ஒன்றில் பவுடர் சோடா மற்றும் சில பொருட்களை விளையாட்டாக
கலக்கி குச்சியுடன் வெளியில் போட்டு விட்டான் இந்த சிறுவன். அடுத்த நாள் காலையில்
பனியில் உறைந்து போன ஐஸ்யை குச்சியுடன் எடுத்து சுவைத்தபோது நன்றாக இருந்தது. அதன்
பிறகு தனது 28 வயதில்
வீட்டிலேயே அந்த குச்சி ஐஸை தயாரித்து, அருகில் உள்ள பூங்காக்களில் விற்பனை
செய்துள்ளார். பின்பு சிறிது சிறிதாக பாப்சிகிள் என்ற நிறுவனத்தை
உருவாக்கியுள்ளார்.
Richie stachowski என்ற சிறுவன் அடிக்கடி தனது பெற்றோர்களுடன்
சுற்றுலா செல்ல கூடியவன். அப்படி ஒரு முறை செல்லும்போது நீருக்கடியில் செல்லும்
சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், நீரினுள் தன்னால் பேச முடியவில்லை என்பது அப்போதுதான்
சிறுவனுக்கு தெரிந்துள்ளது. இதன் மூலம்தான் நீரினுள் பேசும்படியான வாட்டர் டாக்கி
என்ற அமைப்பை உருவாக்கி அதனை சிறுவயதிலேயே ஒரு நிறுவனத்தை உருவாக்கி அந்த
நிறுவனத்தின் மூலம் விற்பனையும் செய்துள்ளான். 1999-இல் தனது 13-வது வயதில்
சிறந்த தொழில் முனைவோர் என்ற பட்டத்தையும் கூட வாங்கியுள்ளார்.
1. காது கேளாதோருக்கான
செவி (Music for deaf)
இது ஒரு வினோதமான மற்றும் உபயோகமான கண்டுபிடிப்பு என்றே கூறலாம். Jonah
kohn என்ற 13 வயது சிறுவன் கிட்டார் வாசிப்பதில் பேரார்வம்
கொண்டிருந்தான். மேலும், அடிக்கடி தன் நண்பர்களுடன் சேர்ந்து இசையை வாசிப்பவர்,
ஒரு முறை அப்படி வாசித்துக் கொண்டிருந்தபோது அருகாமையில் ஏற்பட்ட இரைச்சலில்
இருந்து வரும் இசை சரியாக கேட்கவில்லை.
அப்போது எதிர்பாராதவிதமாக கிட்டார்
நரம்புகளில் ஒன்று தனது பல்லின் மீது பட்டபோது இசை மிக தெளிவாக கேட்டது.
இதைப்பற்றி புத்தகங்களில் தேடிய போது பற்களில் ஏற்பட்ட அதிர்வு, எலும்பு மூலமாக
மூளையைச் சென்றடைந்து நேரடியாக சத்தத்தை உணர முடியும் என அறிந்து கொண்டார். இதன்
மூலம் சில அமைப்புகளை உருவாக்கி, அதை காது சரியாகக் கேட்காதவர்களிடம் சோதனை
செய்தபோது 93.5 சதவீத அளவிற்கு
இசையை அவர்களால் உணர முடிந்தது. எனவே, இதனை மேலும் மேம்படுத்தி ஒரு கருவியாகவே
உருவாக்கிவிட்டார். காது கேட்காதவர்களுக்கு உதவியாக இருக்கும் அந்த கருவி 2013-ஆம் ஆண்டு கூகுள்
நடத்திய அறிவியல் கண்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது. அப்போது Jonah- வுக்கு
14 வயதுதான் என்பது
குறிப்பிடத்தகுந்தது.
No comments:
Post a Comment