போர்க்கப்பல்னா இது தான், உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்கப்பல் - HybridAnalyzer Tamil

Hot

Thursday 26 September 2019

போர்க்கப்பல்னா இது தான், உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்கப்பல்


ஒரு நாட்டின் கப்பல் படை தான் போர் பலத்தை அதிகரித்துக் காட்டுவது. பழங்காலத்தில் நமது தமிழ் மன்னர்களான மூவேந்தர்களில் ஒருவரான சோழ மன்னர்கள் கூட கப்பற்படையின் உதவியோடு, தெற்காசியாவின் பெரும்பான்மையான பகுதிகளை கைப்பற்றி ஆண்டுவந்தார்கள். அப்படிப்பட்ட போர்க்கப்பல்களில், தற்போது உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலை பற்றிதான் இந்த தலைப்பில் குறிப்பிட்டுள்ளோம்.
தற்சமயத்தில் உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஆக இருப்பது அமெரிக்காவின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் வகைக் கப்பல்கள் தான்.

அமெரிக்க கப்பற்படை 1967 ஆம் ஆண்டு தனக்கு உலகிலேயே மிகப்பெரிய போர்க்கப்பல் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, அந்த சமயத்தில் கப்பல் கட்டும் துறையில் மிகச்சிறந்த நிறுவனமான நியூபோர்ட் நியூ டெக் என்ற கம்பெனியிடம் இந்த கப்பலை வடிவமைத்து கட்டும் பொறுப்பை ஒப்படைத்தது.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அமெரிக்க கப்பல் படையில் தளபதியாக இருந்த சேஸ்டர் டபிள்யூ நிமிட்ஸ் என்பவரின் நினைவாக இந்த மிகப்பெரிய போர்க்கப்பல் அவரது பெயரையே நிமிட்ஸ் என்று வைத்தார்கள். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் தீவிர உழைப்பிற்குப் பின், 1975 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஆன ஜெரால்ட் ஃபோர்ட் என்பவரால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

நிமிட்ஸ் கப்பலின் கட்டமைப்பை பற்றி கூற வேண்டுமானால், 1968 ஆம் ஆண்டு வெர்ஜினியாவின் கடல் பகுதியில் கட்டப்பட்ட இந்த கப்பலுக்கு, கட்டுமான செலவாக இன்றைய மதிப்பின்படி சுமார் 5 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவாகியுள்ளது. சுமார் 330 மீட்டர் நீளத்துடன் பரந்து விரிந்து காணப்படும் இது, 31.5 நாட்டிக்கல் மைல் வேகத்தில், அதாவது 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 101600 டன் எடை கொண்ட இது, 260000 ஹார்ஸ் பவர் உடன் செயல்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 16000 யானைகளுக்கு சமமான எடை கொண்டது.

ஒரே நேரத்தில் 2480 போர் விமானங்களை நிறுத்தி வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய கப்பல் இதுதான். இதில் குறைந்தது 90 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எப்போதும் எதிரிகளை தாக்குவதற்காக தயார் நிலையில் இருக்கும்.

இந்தக் கப்பல் உலகம் முழுவதும் சுற்றித் திரிவதால், பாதுகாப்பு கருதி, கப்பலைச் சுற்றியும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் வேலை என்னவென்றால், எதிரி நாட்டு விமானமோ அல்லது ஏவுகணையோ தாக்க முற்படும் போது, பல கிலோமீட்டர்களுக்கு முன்பே துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய அளவிற்கு திறன்பட உருவாக்கப்பட்டுள்ளது.

முன் மற்றும் பின் பகுதியில் உள்ள அதிகப்படியான நவீன ஆயுதங்களையும், எப்போதும் தயார் நிலையில் உள்ள போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் பராமரிக்க 5,000 வீரர்களுக்கு மேல் கப்பலில் பணியில் உள்ளார்கள்.

கடந்த 40 வருட காலத்தில் நிமிட்ஸ், பல ராணுவ சாகசங்களை திறன்பட செய்து முடித்துள்ளது. அதில் முக்கியமாக கூறவேண்டுமானால், 1989-ஆம் ஆண்டு, ஈரான் மன்னர் கொல்லப்பட்ட போது அங்கு உள்ள அமெரிக்க மக்களை பாதுகாக்க பல நாட்கள் துறைமுகத்தில் இந்த கப்பல் வீரர்களுடன் முகாமிட்டிருந்தது.

அதன்பிறகு, 1981-ஆம் ஆண்டு லிபியாவில் உள்நாட்டுப் போர் வெடித்தபோது, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக லிபிய இராணுவத்துடன் சேர்ந்து போரிட்ட போது, அமெரிக்க விமான படைகளுக்கு இந்த நிமிட்ஸ் போர்க் கப்பல் மிகப்பெரிய உறுதுணையாக நின்றது. அதன் விளைவாக அந்த நாட்டு கிளர்ச்சியாளர்களுடன் நடத்திய போரில் வெற்றியும் அடைந்தது.

இந்த சம்பவங்களுக்கு பிறகு, மிக மிக முக்கியமாக, 1988-ஆம் ஆண்டு, தென் கொரியாவின் தலைநகரான சியோலில் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது, பாதுகாப்பிற்காக போட்டி முடியும் வரை இந்த கப்பல் கொரியாவின் கடற்கரை பகுதியை சுற்றி வலம் வந்தது. அதற்கு காரணம் அமெரிக்காவின் எதிரி நாடான வட கொரியா சீயோனிலிருந்து வெறும் 30 மைல் தூரம் மட்டுமே.

அதற்குப்பின் 1907-இல் இருந்து, மற்ற நாடுகளின் அணு ஆயுத சோதனைக்காக நான்கு வருடங்கள் தொடர்ந்து பல நாடுகளை சுற்றி வந்தது. இறுதியாக 2007-ஆம் ஆண்டு சீனாவிற்கு எதிராக இந்திய பெருங்கடலில் நடந்த இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்திய கூட்டுப் பயிற்சியில் அமெரிக்கா சார்பாக இந்த நிமிட்ஸ் போர்க்கப்பல் கலந்துகொண்டு கடற்படை போர் பற்றிய பயிற்சிகளை மூன்று நாட்கள் மேற்கொண்டது.

இப்படிப்பட்ட இந்த கப்பலின் எஞ்சினை இயக்குவதற்ககென்று இரண்டு அணு உலைகள் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு அணு உலைகளும் மாறி மாறி செயல்படுவதால், கப்பல் தொடர்ந்து 20 முதல் 25 வருடங்கள் பயணிக்கக் கூடிய அளவு திறன் பெற்றதாக உள்ளது. இதை மற்ற நாடுகள் தாக்க முற்பட்டால் 1945-ஆம் ஆண்டு ஜப்பானுக்கு ஏற்பட்ட நிலைதான் தாக்கும் நாட்டிற்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பெருமை கொண்ட இந்த நிமிட்ஸ் கப்பல், 2022-ஆம் ஆண்டு ஓய்வு பெறப் போகிறது. அதற்கு பின் இந்த இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் USS Gerald R Ford என்ற கப்பல் மிகப்பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதைப் பற்றிய தகவலை மற்றும் ஒரு தொகுப்பில் காணலாம்.

No comments:

Post a Comment