25 வருடங்களுக்கு பிறகு தன் குழந்தைப் பருவ புத்தகத்தை அருங்காட்சியத்தில் கண்டுபிடித்த பெண்! - HybridAnalyzer Tamil

Hot

Monday 28 October 2019

25 வருடங்களுக்கு பிறகு தன் குழந்தைப் பருவ புத்தகத்தை அருங்காட்சியத்தில் கண்டுபிடித்த பெண்!

ஒருவர் சிறுமியாக இருந்தபோது தன் பெயரை எழுதிய புத்தகத்தை மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ அண்ட்ரோஸ் மற்றும் அவரது சகோதரி ஹெனா, இவர்கள் சிறுமிகளாக இருந்தபோது தி சீக்ரட் கார்டன் என்ற புத்தகத்தை வைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் அந்த புத்தகத்தில் ஹேனா என எழுதியுள்ளார்கள். பின்னர் அவர்கள் வளர்ந்து விட்டதால் அந்தப் புத்தகத்தை சில ஆண்டுகளில் ஆக்ஸ் ஃபார்ம் சேரிட்டி ஃசாப் என்ற அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்கள்.

சமீபத்தில் 35 வயதான ஜோ ஒரு பழைய புத்தக அருங்காட்சியகத்தில் தி சீக்ரட் கார்டன் என்ற பெயர் கொண்ட புத்தகத்தை பார்த்துள்ளார். அந்தப் பெயரைப் பார்த்தவுடன் தன்னுடைய குழந்தைப் பருவம் நினைவிற்கு வரவே அதை திறந்து பார்த்தபோது அவரும் அவருடைய சகோதரி ஹேனாவும் சிறு வயதில் நன்கொடையாக கொடுத்த அதே புத்தகம் தான் அது என்பதை அந்த புத்தகத்தின் முன் பக்கத்தில் இருந்த கையெழுத்து மூலம் கண்டுபிடித்தார்.

அதைப்பற்றி பத்திரிகையாளர்கள் ஜோ-விடம் கேட்டபோது இப்படி ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இதில் என்னுடைய மற்றும் என் சகோதரியின் பல நினைவுகள் உள்ளது எனக்கூறி, 50 பவுண்டுகள் கொடுத்து அந்த புத்தகத்தை மீண்டும் வாங்கிவிட்டார். 50 பவுண்டுகள் என்பது இந்திய மதிப்பில் சுமார் 4500 ரூபாய் இருக்கும்.
தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

No comments:

Post a Comment