HybridAnalyzer Tamil: viral news

Hot

Showing posts with label viral news. Show all posts
Showing posts with label viral news. Show all posts

Friday 1 November 2019

2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை சாஸ் பாட்டிலில் கடத்தி வந்த கொள்ளையர்கள், மடக்கிப் பிடித்த ஆஸ்திரேலிய போலீஸ்!

November 01, 2019 0
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திற்கு, அமெரிக்காவிலிருந்து சந்தேகப்படும் படியான ஒரு சரக்கு பெட்டக வந்துள்ளது. அதனுடைய ஆவணங்களை சரிபார்த்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் அதில் ஏதோ குளறுபடி இருப்பதாக சந்தேகித்ததால் அதைக் கொண்டு வந்த நான்கு நபர்களை தனியாக அழைத்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.


சில்லி சாஸ் எனக்கு குறிப்பிடப்பட்டிருந்த அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் சில்லி சாஸ் பாட்டில்கள் தான் இருந்தது. இருந்தாலும் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக அதிலிருந்த சில பாட்டில்களை திறந்து சோதித்தபோது அதில் மெத்திலம் பெட்டமைன் என்கிற போதைப்பொருள் கலந்திருந்தது தெரியவந்தது.

உடனே அந்த நால்வரையும் கைது செய்ததோடு ஒட்டுமொத்த பாட்டில்களையும் சோதனைக்கு உட்படுத்தினார்கள். இதில் 400 கிலோ அளவுள்ள அதே ரக போதை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு 272 மில்லியன் டாலர்கள். அதாவது, நமது இந்திய மதிப்பில் கூறவேண்டுமானால் சுமார் 1930 கோடியை தாண்டும்.

400 கிலோ என்பது மிகப்பெரிய அளவு என்பதால் இந்த நான்கு நபர்கள் மட்டும் அல்லாமல் இவர்கள் பின்னால் பெரிய கூட்டமே இருக்கும் என ஆஸ்திரேலிய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read More

Monday 28 October 2019

25 வருடங்களுக்கு பிறகு தன் குழந்தைப் பருவ புத்தகத்தை அருங்காட்சியத்தில் கண்டுபிடித்த பெண்!

October 28, 2019 0
ஒருவர் சிறுமியாக இருந்தபோது தன் பெயரை எழுதிய புத்தகத்தை மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ அண்ட்ரோஸ் மற்றும் அவரது சகோதரி ஹெனா, இவர்கள் சிறுமிகளாக இருந்தபோது தி சீக்ரட் கார்டன் என்ற புத்தகத்தை வைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் அந்த புத்தகத்தில் ஹேனா என எழுதியுள்ளார்கள். பின்னர் அவர்கள் வளர்ந்து விட்டதால் அந்தப் புத்தகத்தை சில ஆண்டுகளில் ஆக்ஸ் ஃபார்ம் சேரிட்டி ஃசாப் என்ற அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்கள்.

சமீபத்தில் 35 வயதான ஜோ ஒரு பழைய புத்தக அருங்காட்சியகத்தில் தி சீக்ரட் கார்டன் என்ற பெயர் கொண்ட புத்தகத்தை பார்த்துள்ளார். அந்தப் பெயரைப் பார்த்தவுடன் தன்னுடைய குழந்தைப் பருவம் நினைவிற்கு வரவே அதை திறந்து பார்த்தபோது அவரும் அவருடைய சகோதரி ஹேனாவும் சிறு வயதில் நன்கொடையாக கொடுத்த அதே புத்தகம் தான் அது என்பதை அந்த புத்தகத்தின் முன் பக்கத்தில் இருந்த கையெழுத்து மூலம் கண்டுபிடித்தார்.

அதைப்பற்றி பத்திரிகையாளர்கள் ஜோ-விடம் கேட்டபோது இப்படி ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இதில் என்னுடைய மற்றும் என் சகோதரியின் பல நினைவுகள் உள்ளது எனக்கூறி, 50 பவுண்டுகள் கொடுத்து அந்த புத்தகத்தை மீண்டும் வாங்கிவிட்டார். 50 பவுண்டுகள் என்பது இந்திய மதிப்பில் சுமார் 4500 ரூபாய் இருக்கும்.
தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
Read More