இந்தக் கருப்பனுக்கு வெள்ளையர் அடிமையான கதை கேட்பதற்கு வியப்பாக,
வேடிக்கையாக இருந்தாலும்
உலக வரலாற்றில் இதுதான் நடந்த உண்மை.
நானறிந்த வரை வெறும்
4.5 மி.மீ அளவில் சிறு
உருண்டையாகத் தோற்றம் காட்டி காய்ந்து கறுத்த உருகொண்டு, கறுப்புத் தங்கம் என்ற புனைபெயரால் அழைக்கப்பட்டு, கைவிரலிடுக்கினில் கூட நசுங்கி பொடிபடக்கூடிய
மிகச்சிறிய அளவிலான உருண்டைதான்.
நம் நாடு ஆங்கிலேயர்களின்
கீழ் அடிமையாகி பலநூறு ஆண்டுகள் துன்பங்கள் பலவற்றை அனுபவிக்க முழுமுதல் காரணமாக
இருந்தது. அன்றைக்கு இச்சிறு உருண்டைதான் உலக வரலாற்றையே மாற்றி அமைத்தது என
கூறினால் அது மிகையாகாது.
இந்தியாவை இயற்கை வாழிடமாகக் கொண்டு பிறந்த இது, வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே கேரளக்
கடற்கரைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி இந்தியர்களின் வாணிகத்தில் பெரும்பங்காற்றி
'கருப்புத் தங்கம்' என்ற சிறப்பு விருதுகளையும் அன்றைக்கே
அடைந்தது. பண்டைக்காலத்தில் பணத்திற்கு மாற்றாக இதனை உபயோகப்படுத்தியதாகவும் வரலாறு
கூறுகிறது.
இன்றைக்கு அரபு நாடுகளின் எண்ணெய் வளம் உலகப் பொருளாதாரத்தை
கட்டுப்படுத்துவதைப்போல, அன்றைக்கு உலகப்
பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் வலிமையோடு, உலகச் சந்தையில் முன்னணியில் இருந்தது
காரணமாகவே இதன் பிறப்பிடம் தேடி இந்தியா வந்தனர் அந்நிய நாட்டு வணிகர்கள்.
ஐரோப்பிய நாடுகளில் இவற்றின் தேவை மிக அதிகமாக இருந்ததாலும், இடைத்தரகர்கள் விலையை உயர்த்திக் கொண்டே
இருந்ததாலும், இதன் இறக்குமதியை அதிகப்படுத்தும் பொருட்டே, இந்தியாவுக்கு முதலில் கடல்வழி
கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்தியாவை ஐரோப்பியர் கைப்பற்றி அரசாளவும், அமெரிக்கா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்துக்
குடியேற்றம் செய்யவும் வழிவகை செய்தது.
சிறப்பம்சமான , தனித்துவமான காரச்சுவை
மிக்க இந்த சின்னஞ்சிறு மிளகு இல்லாவிடில் நம் நாட்டின் வரலாறே வேறு வகையில்
மாறியிருக்கும்.
லண்டனில் டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததன்
காரணத்தால்தான் இந்தியாவிலிருந்து நேரடி கொள்முதல் செய்யும் நோக்கில் ஆங்கிலேயர்களால்
கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனமே துவங்கப்பட்டது.
No comments:
Post a Comment