Wednesday, 17 April 2024
Sunday, 1 January 2023
மிரள வைக்கும் ஆபத்தான விமான தளங்கள்
Sunday, 15 May 2022
கடற்கரையில் கரை ஒதுங்கிய வினோதமான பிராணிகள்! 10 Most Strangest Beached Creatures!
கடல் நம்மை பல வகையில் ஆச்சரியப்படுத்துகிறது. சில நேரங்களில் கடலில் வாழக்கூடிய பிராணிகள், ஏதோ ஒரு காரணத்தால் கடலை விட்டு வெளியே வந்து கரையில் ஒதுங்கி நிற்கும். இந்த சம்பவம் பல நேரங்களில் நடப்பதாக இருந்தாலும், சில நேரத்தில் பிரம்மாண்டமான திமிங்கலம், வினோதமான மர்ம பிராணிகள் என நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்தும் பிராணிகளும் கூட கரை ஒதுங்குகின்றன. அதுபோல கடற்கரையில் கரை ஒதுங்கிய மிகவும் ஆச்சரியமான பிராணிகளைப் பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
Friday, 11 December 2020
விலங்கு வயிற்றில் கிடைத்த 9 வினோத பொருட்கள்!
Sunday, 6 December 2020
காண்பவர்களை மிரள வைக்கும் 10 வினோதமான அரிய வகை சிலந்திகள்
பொதுவாக சிலந்திகள் நிறைய பேரை பார்க்கும்போதே பயமுறுத்தும் ஒரு சின்ன உயிரினம். அதில் சில வகை சிலந்தி பயமுறுத்துவது மட்டுமில்லாமல் தனது விஷத்தால் கொலையும் செய்யும். ஆனால் மொத்தமாக உள்ள 43 ஆயிரத்துக்கும் அதிகமான சிலந்தி இனங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தான் இருக்கும்.
சில சிலந்தி சாதாரணமாகவும், இன்னும் சில அரிய இனமாகவும், வேறு சில சிலந்திகளை பற்றி கேட்கும்போது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். அப்படி ஆச்சரியத்தக்க பண்போடு இருக்கும் சில அரிய வகை சிலந்தி இனங்களைப் பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
Tuesday, 21 April 2020
ஊரடங்கால் உலகம் மாறியதை காட்டும் 10 புகைப்படங்கள்! Photos That show Before and After Corona Infection in tamil
அட இது தான் அந்த இடமா.? என்று முட்ட முட்ட பார்க்கும் அளவுக்கு, லாக்-டவுன் நேரத்தில் மாற்றம் கண்டுள்ளன ஒரு சில முக்கிய இடங்கள். மூச்சு முட்டும் புகை, கால் வைக்க முடியாத அளவுக்கு குப்பை, குடலை பிடுங்கும் நாற்றம் என்று மனிதர்களால் அலங்கோலமாகிய பகுதிகள் எல்லாம், இன்றைக்கு இயற்கை வாசத்தில் மணக்கின்றன. ஒரு பக்கம் லாக்-டவுன் வித்தியாசமான உணர்வை நமக்கு கொடுத்தாலும், இன்னொரு புறம் புது உலகை படைத்துக்கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம். இயற்கை தன்னைத்தானே கட்டமைத்துக்கொள்கிறது என்பதற்கு இதுவல்லவா ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஊரடங்குக்கு முன்பு, பின்பு உலகம் எப்படி மாறியிருக்கிறது என்பதை, அடுத்து வரும் படங்களை பார்த்து வியக்கலாம்.
1. Talawe wetland, மும்பை
2. கங்கை நதி, ஹரித்துவார்
3. Kruger National Park, South Africa
4. Miami கடற்கரை, புளோரிடா
5. JJ Flyover, Mumbai
6. Llandudno, Wales
7. Haridwar சாலை
8. Los Angeles, அமெரிக்கா
9. Vrishabhavathi ஆறு, பெங்களூரு
10. திருமலை, திருப்பதி
ஒரு மாத காலத்திற்குள் எத்தனை மாற்றங்கள், இவ்வளவு காலம் தன்னைத்தானே புதுப்பித்து வந்த இயற்கையை எந்த அளவுக்கு மாற்றி வைத்துள்ளோம் என்பதற்கு இவைகளே சாட்சி.
Sunday, 2 February 2020
"கொரோனா வைரஸ் உண்மையில் பயோ வெப்பனா" சர்ச்சையைக் கிளப்பிய ஆமெரிக்க ஆய்வு வெளியீடு!
சீனாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே, இந்த வைரஸ் உருவானது குறித்து மிகப்பெரிய விவாதங்களும் எழுந்தன. இதுதொடர்பாக, அமெரிக்காவில் பிரபலமான `ஸீரோ ஹெட்ஜ்' என்கிற வலைதளம் வெளியிட்ட Is This the Man Behind the Global Coronavirus Pandemic என்கிற கட்டுரை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
![நீக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு](https://images.assettype.com/vikatan%2F2020-02%2F3ab747ad-4a8c-437e-bce8-bae9ba340cb2%2Fscreenshot_2020_02_01_at_091618.png?w=640&auto=format%2Ccompress)
Friday, 1 November 2019
2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை சாஸ் பாட்டிலில் கடத்தி வந்த கொள்ளையர்கள், மடக்கிப் பிடித்த ஆஸ்திரேலிய போலீஸ்!
சில்லி சாஸ் எனக்கு குறிப்பிடப்பட்டிருந்த அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் சில்லி சாஸ் பாட்டில்கள் தான் இருந்தது. இருந்தாலும் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக அதிலிருந்த சில பாட்டில்களை திறந்து சோதித்தபோது அதில் மெத்திலம் பெட்டமைன் என்கிற போதைப்பொருள் கலந்திருந்தது தெரியவந்தது.
உடனே அந்த நால்வரையும் கைது செய்ததோடு ஒட்டுமொத்த பாட்டில்களையும் சோதனைக்கு உட்படுத்தினார்கள். இதில் 400 கிலோ அளவுள்ள அதே ரக போதை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு 272 மில்லியன் டாலர்கள். அதாவது, நமது இந்திய மதிப்பில் கூறவேண்டுமானால் சுமார் 1930 கோடியை தாண்டும்.
400 கிலோ என்பது மிகப்பெரிய அளவு என்பதால் இந்த நான்கு நபர்கள் மட்டும் அல்லாமல் இவர்கள் பின்னால் பெரிய கூட்டமே இருக்கும் என ஆஸ்திரேலிய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Monday, 28 October 2019
25 வருடங்களுக்கு பிறகு தன் குழந்தைப் பருவ புத்தகத்தை அருங்காட்சியத்தில் கண்டுபிடித்த பெண்!
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ அண்ட்ரோஸ் மற்றும் அவரது சகோதரி ஹெனா, இவர்கள் சிறுமிகளாக இருந்தபோது தி சீக்ரட் கார்டன் என்ற புத்தகத்தை வைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் அந்த புத்தகத்தில் ஹேனா என எழுதியுள்ளார்கள். பின்னர் அவர்கள் வளர்ந்து விட்டதால் அந்தப் புத்தகத்தை சில ஆண்டுகளில் ஆக்ஸ் ஃபார்ம் சேரிட்டி ஃசாப் என்ற அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்கள்.
சமீபத்தில் 35 வயதான ஜோ ஒரு பழைய புத்தக அருங்காட்சியகத்தில் தி சீக்ரட் கார்டன் என்ற பெயர் கொண்ட புத்தகத்தை பார்த்துள்ளார். அந்தப் பெயரைப் பார்த்தவுடன் தன்னுடைய குழந்தைப் பருவம் நினைவிற்கு வரவே அதை திறந்து பார்த்தபோது அவரும் அவருடைய சகோதரி ஹேனாவும் சிறு வயதில் நன்கொடையாக கொடுத்த அதே புத்தகம் தான் அது என்பதை அந்த புத்தகத்தின் முன் பக்கத்தில் இருந்த கையெழுத்து மூலம் கண்டுபிடித்தார்.
அதைப்பற்றி பத்திரிகையாளர்கள் ஜோ-விடம் கேட்டபோது இப்படி ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இதில் என்னுடைய மற்றும் என் சகோதரியின் பல நினைவுகள் உள்ளது எனக்கூறி, 50 பவுண்டுகள் கொடுத்து அந்த புத்தகத்தை மீண்டும் வாங்கிவிட்டார். 50 பவுண்டுகள் என்பது இந்திய மதிப்பில் சுமார் 4500 ரூபாய் இருக்கும்.
தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது